தமிழ்நாட்டில் மீண்டும் அதிரடி என்.ஐ.ஏ. ரெய்டு!

Advertisements

தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், மன்னார்குடி உள்ளிட்ட 6-க்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இன்று தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி, திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி ஆசாத் தெருவைச் சேர்ந்த பாபா பக்ருதீன் (வயது 38) என்பவர் வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.

இதற்காக இன்று காலைச் சென்னையிலிருந்து காரில் வந்த அதிகாரிகள் ஒரு இன்ஸ்பெக்டர் தலைமையில் 3 பேர் கொண்ட குழுவாகச் சேர்ந்து சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

சோதனையைத் தொடர்ந்து தடை செய்யப்பட்ட ஹிஸ்புத் தஹ்ரிர் இயக்கத்திற்கு ஆதரவாகச் செயல்பட்டதாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *