அமெரிக்காவின் 47வது அதிபராக பதவியேற்றார் டிரம்ப்.!

Advertisements

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், அவருடைய ட்ரூத் சோசியல் என்ற சமூக ஊடக தளத்தில், ஒரு புதிய புகைப்படம் ஒன்றை பகிர்ந்து இவர்தான் அமெரிக்காவின் 45-வது மற்றும் 47-வது ஜனாதிபதி என்று தெரிவித்துள்ளார்.

வெனிசுலாவில் இருந்து அமெரிக்காவுக்கு அபாயகர போதை பொருட்கள் கடத்தப்படுகின்றன என்று டிரம்ப் கடுமையான குற்றச்சாட்டுகளை கூறியதால் அந்நாட்டு அதிபரான நிக்கோலஸ் மதுரோவும் அவருடைய மனைவி சிலியா புளோரசயும் அமெரிக்க ராணுவ வீரர்களால் இந்த மாத தொடக்கத்தில், கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், வெனிசுலாவில் உள்ள அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வெனிசுலாவில் பாதுகாப்பு நிலைமை தொடர்ந்து சீரற்று உள்ளது என்றும் வெனிசுலாவில் ஆயுதமேந்திய கிளர்ச்சி குழுவினர் சாலைகளில் சுற்றி திரிகின்றனர் என்றும் தெரிவித்துள்ளது. அவர்கள் தடுப்புகளை ஏற்படுத்தி அமெரிக்க குடிமக்கள் யாரேனும் உள்ளனரா? என தேடி வருகின்றனர் என்றும் . அவர்களிடம் இருந்து பாதுகாப்பாக விலகி இருக்க வேண்டும் என்றும் தூதரகம் தெரிவித்துள்ளது.

வெனிசுலாவில் சர்வதேச விமான சேவை மீண்டும் தொடங்கப்பட்டு உள்ளது என்றும் அதனால் இதனை பயன்படுத்தி, வெனிசுலாவில் உள்ள அமெரிக்க குடிமக்கள் உடனடியாக வெனிசுலா நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று கேட்டு கொண்டுள்ளது. வெனிசுலாவில் உள்ள அமெரிக்கர்கள் பயணிக்கும்போது கவனத்துடனும், எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளது.

இந்த சூழலில், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், அவருடைய ட்ரூத் சோசியல் என்ற சமூக ஊடக தளத்தில், ஒரு புதிய புகைப்படம் ஒன்றை பகிர்ந்து உள்ளார். அது விக்கிபீடியாவில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படம் போன்று காட்சியளித்தது. ஆனால் அதில், அமெரிக்காவின் 45-வது மற்றும் 47-வது ஜனாதிபதி என்றும் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் என்றும் குறிப்பிட்டு உள்ளதுடன், வெனிசுலாவின் பொறுப்பு தற்காலிக ஜனாதிபதி என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

எனினும், சர்ச்சைக்குரிய இந்த பதிவுக்கு வேறு எதுவும் தலைப்பு வைக்கவோ அல்லது வேறு எந்த தகவலையோ டிரம்ப் பகிரவில்லை. வெனிசுலாவின் எண்ணெய் வளங்கள் மீது டிரம்ப் குறி வைத்திருக்கும் நிலையில், இந்த பதிவு வெளிவந்துள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *