
புதிய கட்சியை தொடங்குவதற்காக,தற்போது உள்ள பாஜக விலுருந்து அவர் வெளியேற இருக்கிறார் என்றும்,அதை தடுப்பதற்கு பாஜக மேலிடம் முக்கிய முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.பாஜகவினுடைய மாநில தலைவராக அண்ணாமலை இருக்கும்போது தன்னுடைய அதிரடியான பேச்சாலும், துடிப்பான செயல்பட்டாலும் இளைஞர் பட்டாளத்தையே கவர்ந்தவர்.
பொதுவாகவே இவரது பேட்டிகளும், அரசியல் விமர்சனங்களும் சமூக வலைத்தளங்களில் நல்ல கவனத்தை பெறும். அதற்கு ஒரு உதாரணம் சொல்ல வேண்டுமென்றால், “அண்ணா தமிழ்நாட்டுல ஒரு இளிச்சவாயன் இருக்குறான் ணா அவன் பெயர் அண்ணாமலை..என்று செய்தியாளர்களிடம் தன்னை அறிமுகப்படுத்தி கொண்டவர்.
முன்னாள் துணை முதல்வர் ஆக இருந்த உதயநிதி பற்றிய செய்தியாளர் ஒருவரின் கேள்விக்கு ” அண்ணா அவரை UPSC எக்ஸாம் எழுதி பாஸ் மார்க் வாங்க சொல்லுங்கண்ணா… நான் அரசியல் ல விட்டே போய்டுறேன்” போன்ற அண்ணாமலையின் பதில்கள் சமூக வலைத்தளங்கள்ல வைரல் ஆகி மிகப்பெரும் Troll களுக்கும் உள்ளானது. பெரும்பாலும் தமிழகத்துல இவருடைய ஆதரவாளர்கள் இளைனர்களாகவே இருக்கிறார்கள்.
அரசியலுக்கு வருவதற்கு முன்பாகவே அண்ணாமலை காவல் அதிகாரியாக பணியாற்றியவர். இந்த காரணம்தா இவரை அரசியலுக்கு வந்த பின்பும் இன்னும் துடிப்புடன் செயல்படவும் வைத்தது. 2024 மக்களவை தேர்தல்ல தமிழ்நாட்டில் பாஜக விற்காக ஒரு தனி அணியை அமைத்து அன்றய தேர்தல்ல 11 % வாக்குகளை பெற்றது பாஜக.
3 % வாக்குகளை மட்டுமே பெற முடிந்தது.. இந்த நிலையிலதா ஜூன் முதல் வாரத்தில் அண்ணாமலை தேசிய தலைமையைச் சந்திக்க நேரம் கேட்டிருக்கிறார் என்றும், அண்ணாமலை நற்பணி மன்ற நிர்வாகிகளை தீவிரமாக மக்கள்பணி செய்யுங்கள் என உத்தரவு பறந்துள்ளதாக தகவல்கள் சொல்கின்றன.
பாஜகவின் உள்ளே பல உள்கட்சி பூசல்கள் இருப்பதனால் அண்ணாமலை அதிருப்தியில் இருக்கிறார் என்றும், பாஜகவின் சில முக்கிய நிர்வாகிகளுடன் அண்ணாமலைக்கு மோதல் இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையிலதா அண்மையில கோவையில் நடைபெற்ற மாநில மையக்குழு கூட்டத்துல அண்ணாமலையின் ஆதரவாளர்கள் சிலர் அமைப்பு செயலாளர் PL சந்தோஷ் அவர்களிடம் , பாஜகவில் நிறைய இளைஞர்களை அண்ணாமலை,சேர்த்திருக்குறார், அவருக்கு உரிய பொறுப்பு வழங்க வேண்டும் என்று கேக்கப்பட்டதாகவும், அதற்கு PL சந்தோஷ் யாருக்கு எப்போ பொறுப்பு வழங்க வேண்டும் என்று எங்களுக்கு தெரியும்.
அண்ணாமலை புதியக்கட்சியை தொடங்குவாரா?இல்லை பாஜகவை வலுப்படுத்தும் கோரிக்கைகளோடு பாஜக மேலிடத்தை சந்திப்பாரா? அரசியல் களம் அண்ணாமலையை வரவேற்குமா? அல்லது எதிர்க்குமா பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்..




