
அஸ்வினி திவாரி இயக்கியுள்ள சிஸ்டம் திரைப்படத்தின் வெற்றியை உறுதிப்படுத்தும் விதமாக நடிகை ஜோதிகா தனது நன்றியை தெரிவித்துள்ளார்.
இயக்குநர் அஸ்வினி திவாரி இயக்கியுள்ள படம் ‘சிஸ்டம். இத்திரைப்படத்தில் சோனாக்சி சின்ஹா, ஜோதிகா மற்றும் அஷுதோஷ் கோவாரிகர், ப்ரீத்தி அகர்வால் உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படம் கடந்த மே 22ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியானது.
இரு வலிமையான பெண் கதாபாத்திரங்களை மையமாக வைத்து இத்திரைப்படம் உருவாகியுள்ளது. ‘சிஸ்டம்’ படத்திற்கு ரசிகர்களிடம் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் ‘சிஸ்டம்’ வெற்றியை உறுதிப்படுத்தும் விதமாக ஜோதிகா, படத்தின் இயக்குனர் அஸ்வினி ஐயர் திவாரியுடன் மும்பையில் உள்ள பிரபலமான மகாலட்சுமி கோவிலுக்கு சென்று வழிபட்டு தனது நன்றியை தெரிவித்தார்.




