ஹார்மஸ் நீரிணைப் பகுதியைக் காக்காவிட்டால் நேட்டோவின் எதிர்காலம் மிக மோசமானதாக இருக்கும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் ஏவுகணைகள், டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தின. இதற்குப் பதிலடியாக ஈரானும் இஸ்ரேல் மீதும், அரபுநாடுகளில் உள்ள அமெரிக்கப் படைத்தளங்கள், தூதரகங்கள், விமான நிலையங்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளது.
அதேபோல் அரபு நாடுகளில் இருந்து பாரசீக வளைகுடாவின் ஹார்மஸ் நீரிணை வழியாக எண்ணெய் இயற்கை எரிவாயு ஏற்றிச் செல்லும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த வழியாகக் கப்பல்கள் சென்றால் தாக்குதல் நடத்தப்படும் என்று எச்சரித்துள்ளது. இதனால் அமெரிக்கா மற்றும் அதன் ஆதரவு நாடுகளின் எண்ணெய் வணிகம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. ஆசிய நாடுகளுக்கான எண்ணெய் வழங்கல் முற்றிலும் தடைபட்டுள்ளது.
பல நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நாளிதழுக்குப் பேட்டியளித்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், உலக எண்ணெய் ஏற்றுமதிக்கான நீர்வழித்தடமான ஹார்மஸ் நீரிணையைக் காக்காவிட்டால் நேட்டோவின் எதிர்காலம் மிக மோசமானதாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

