கார்த்திகாவுக்கு ஊக்கத் தொகையை உயர்த்தி வழங்கத் தமிழிசை கோரிக்கை.!

Advertisements

ஆசிய இளையோர் கபடிப் போட்டியில் இந்திய அணி தங்கப் பதக்கம் வெல்லக் காரணமாக இருந்த கண்ணகிநகர் கார்த்திகாவுக்குத் தமிழக அரசு பரிசுத் தொகையை இன்னும் அதிகமாகக் கொடுத்திருக்க வேண்டும் என்று பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

பக்ரைனில் நடைபெற்ற போட்டியில் வென்று நாடு திரும்பிய சென்னை கண்ணகி நகர் கார்த்திகாவின் வீட்டுக்குச் சென்று தமிழிசை அவருக்கு வாழ்த்துத் தெரிவித்தார்.

அப்போது, தமிழ்நாடு அரசு கார்த்திகாவுக்கு 25 இலட்ச ரூபாய் பரிசு வழங்கியுள்ளதாகவும், அந்தப் பரிசுத் தொகையை இன்னும் அதிகமாகக் கொடுத்திருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

கார்த்திகா பிரதமரைச் சந்திக்க வாய்ப்பு ஏற்படுத்தித் தரத் தான் முயல்வதாகக் கூறினார். ஊர்ப் பெயர், தெருப்பெயர்களில் உள்ள சாதிப் பெயரை ஒழிப்பதால் மட்டும் ஏற்றத் தாழ்வுகள் ஒழிந்து விடப் போவது இல்லை என்று கூறினார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *