Vilathikulam : மாணவி கொல்ல*ப்பட்டதைக் கண்டித்து போராட்டம்.!

விளாத்திக்குளம் மாணவி கொல்லப்பட்டதைக் கண்டித்தும், அதற்கு நீதி கேட்டும் பாளையங்கோட்டையில் பொதுமக்கள் வீடுகளில் கருப்புக்கொடி கட்டிப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் அருகே வேடநத்தத்தில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவி கொல்லப்பட்டது தமிழகத்தையே உலுக்கியுள்ளது.

இது திட்டமிட்ட கொலையாக இருக்கலாம் என்று உறவினர்களும், சமூக அமைப்புகளும் குற்றம் சாட்டி வருகின்றனர். இதுவரை ஒருவரைக் கூடக் காவல்துறையினர் கைது செய்யாதது பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் மாணவி கொலைக்கு நீதி வழங்கக் கோரியும், குற்றவாளிகளைக் கைது செய்ய வலியுறுத்தியும் திருநெல்வேலி பாளையங்கோட்டை மக்கள் தங்கள் வீடுகளிலும், கடைகளிலும் கருப்புக்கொடி கட்டியுள்ளனர். சாலைகளின் மேல் கருப்புக் கொடிகளைக் கட்டிப் பறக்க விட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *