நாளை `மாஸ்க்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

Advertisements

தமிழ் சினிமாவில் முன்னணி இடத்தில் உள்ள இளம் நடிகர்களில் கவின் முக்கியமானவர். அவர் நடித்த லிஃப்ட் மற்றும் டாடா திரைப்படங்கள் ரசிகர்களிடையே சிறந்த வரவேற்பைப் பெற்றுள்ளன. இதன் மூலம், கவினுக்கு தொடர்ந்து புதிய பட வாய்ப்புகள் கிடைக்க தொடங்கின.

அதன்பின், கவின் ஸ்டார் மற்றும் ப்ளடி பெக்கர் என்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். இவை இரண்டும் தனித்துவமான கதைக்களத்துடன் உருவாக்கப்பட்டு, மக்களின் மனதில் இடம் பெற்றுள்ளன.

ஸ்டார் திரைப்படத்திற்குப் பிறகு, கவின் நடன இயக்குனர் சதிஷ் இயக்கத்தில் உருவாகும் கிஸ் என்ற படத்தில் நடித்துள்ளார். கிஸ் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியிடப்பட்டது.

கவினின் 6வது திரைப்படமாக வெற்றிமாறன் தயாரிப்பில், அறிமுக இயக்குனர் விக்ரனன் அசோக் இயக்கத்தில் மாஸ்க் என்ற படம் உருவாகி வருகிறது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *