Advertisements

கோமா நிலையில் பாரதிராஜா- என்னாச்சு? அதிர்ச்சி தகவல்கள்
இயக்குனர் இமயம் என ஒட்டுமொத்த தமிழர்களாலும் பாராட்டு பெற்ற பிரபல சினிமா இயக்குனர் பாரதிராஜா தற்போது கோமா நிலையில் இருக்கிறார் என்ற அதிர்ச்சி தகவல் ஒட்டுமொத்த தமிழகத்தையும் ஆழ்ந்த கவலைக்குள்ளாக்கி இருக்கிறது
இது பற்றி ஜெம் தொலைக்காட்சி வழங்கும் சிறப்பு செய்தி தொகுப்பை இப்போது பார்க்கலாம்
பிரபல தமிழ் சினிமா இயக்குனர் பாரதிராஜா வுக்கு தற்பொழுது 84 வயதாகிறது. தேனி அல்லி ரத்தைச் சேர்ந்த பாரதிராஜா தமிழ் சினிமாவில் மிகப்பெரிய திருப்புமுனைகளை ஏற்படுத்தியவர் .பாரதிராஜாவின் வருகைக்கு முன்பு தமிழ் சினிமா என்பது செட்டிங் எனப்படும் அரங்கத்திற்குள் எடுக்கப்பட்டது இவரது வருகைதான் திரைப்படங்களை வெளிப்புற படப்பிடிப்புகளுக்கு அழைத்துச் சென்றது அது மட்டுமல்லாமல் நாட்டுப்புறக் கதைகளை உணர்வு நிறைந்த காட்சிகளால் படம் பிடிப்பதில் வல்லவராக திகழ்ந்தவர் பாரதிராஜா .பெரும்பாலானாய் வருது படங்கள் அனைத்தும் கிராமத்து வயல்வெளிகளிலும் இயற்கை பூஞ்சோலைகளிலும் படமாக்கப்பட்டிருக்கும். அதேபோல் தனது சினிமாவில் பாடல்களுக்கும் கருத்துகளுக்கும் முக்கியத்துவம் தருபவர் பாரதிராஜா
இசையமைப்பாளர் இளையராஜாவுடன் இணைந்து மறக்க முடியாத ஏராளமான இனிய பாடல்களை தந்தவர் .தேனி அல்லி நகரத்தைச் சேர்ந்த பெரிய மாயத்தேவர் . கருத்தம்மாள் ஆகிய தம்பதியின் மகனாக பிறந்த பாரதிராஜாவின் மனைவி சந்திரலீலா. மகன் மனோஜ் மகள் ஜனனி .கன்னட திரைப்பட தயாரிப்பாளர் புட்டண்ணாவின் உதவியாளராக சினிமா வாழ்க்கையை தொடங்கிய பாரதிராஜா தனது முதல் படமாக 16 வயதினிலே என்ற திரைப்படத்தை கதை எழுதி இயக்கி இருந்தார்
கிராமத்து திரைப்படம் என்ற புதிய வகையில் வெளிவந்த 16 வயதினிலே திரைப்படம் தமிழ் சினிமாவில் ஒரு மைல் கல்லாக பார்க்கப்படுகிறது. இந்த திரைப்படத்தில் ரஜினி பேசும் பக்தவச்சிட்டியே பரட்டை என்ற வசனம் காலத்தால் அழியாதது . உலகநாயகன் கமலஹாசன் நடிகை ஸ்ரீதேவி ஆகியோரும் இந்த படத்தில் நடித்திருந்தார்கள் . இந்த படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் மிகப்பெரிய வெற்றியை சந்தித்தன.இதற்கு அடுத்தபடியாக கிழக்கே போகும் ரயில் என்ற வெற்றி படத்தை இயக்கினார். இந்தப் படம் தான் ராதிகாவை தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியது . இந்தப் படத்தில் பாடல்கள் அனைத்தும் மிகப்பெரிய வெற்றி பெற்றது
கிராமத்து சினிமா மட்டுமல்ல சிகப்பு ரோஜா என்ற பட்டணத்து கதையையும் படமாக்கி வெற்றிகரமான இயக்குனராகவும் பாராட்டுக்கள் பெற்றார் பாரதிராஜா .இதனைத் தொடர்ந்து டிக் டிக் டிக் என ஒரு அதிரடி படத்தையும் இயக்கி வெளியிட்டார்
தொடர்ந்து அலைகள் ஓய்வதில்லை மண்வாசனை முதல் மரியாதை என கிராமத்து பின்னணி கொண்ட பாரதிராஜாவின் படங்கள் ஒட்டுமொத்த தமிழர்களின் இதயத்திலும் நீங்காத இடத்தைப் பெற்றன
நடிகை ராதாவும் கார்த்தியும் நடித்த அலைகள் ஓய்வதில்லை திரைப்படம் இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய கொண்டாட்டத்தை ஏற்படுத்தியது. காதலே மையமாகக் கொண்ட இந்த படத்தில் ஆயிரம் தாமரை மொட்டுக்களே என்ற பாடல் மெகா ஹிட் ஆகியது.இதேபோல்பாரதிராஜா இயக்கிய முதல் மரியாதை படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் கிராம தலைவராக வயது முதிர்ந்தவராக காட்சியளித்தார் அதேசமயம் நடிகை ராதா ஒரு இளம் பெண்ணாக நடித்து மாறுபட்ட கிராமத்து நடிகையாக வெளிப்பட்டார் வடிவுக்கரசிக்கு மிகவும் புகழ் சேர்த்தது இந்த முதல் மரியாதை படம் தான் .
இந்தப் படத்தில் இடம்பெற்ற பூங்காற்று திரும்புமா என்பது உள்ளிட்ட அனைத்து பாடல்களும் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது.சினிமா இயக்குவது தவிர ஏராளமான படங்களிலும் பாரதிராஜா நடித்திருக்கிறார் சமீபத்தில் தனுசுடன் அவர் நடித்த திருச்சிற்றம்பலம் படம் அவருக்கு மிகப்பெரிய புகழை பெற்று தந்தது.
பாரதிராஜாவின் பல படங்கள் தேசிய விருதுகளை பெற்றுள்ளன பத்மஸ்ரீ உள்படை ஏராளமான மிகப்பெரிய விருதுகளை பெற்றவர் பாரதிராஜா. இவரது மகன் மனோஜ் இருதய கோளாறு ஏற்பட்டு சமீபத்தில் தான் மரணம் அடைந்தார். மனோஜ் தாஜ்மஹால் வருஷமெல்லாம் வசந்தம் உள்பட பல படங்களில் நடித்திருக்கிறார். மகன் மனோஜ் மீது தீராத பாசம் கொண்டவர் பாரதிராஜா. மகன் மனோஜ் மரணத்தின் போது மகனே எனக்கு கொள்ளி வைக்க வேண்டிய நீ உனக்கு கொள்ளி வைக்க வைத்து விட்டாயே என கண்ணீர் விட்டு கதறியது தமிழ் ரசிகர்கள் அனைவரையும் மனம் கலங்கச் செய்தது
முன்னதாகவே இயக்குனர் பாரதிராஜா நுரையீரல் தொற்று ஏற்பட்டு சென்னை அமைந்தகரையில் உள்ள ஒரு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதன் பின்னர் மருத்துவர்களின் மிகப்பெரிய முயற்சியால் அவர் மீண்டு வந்தார். இந்த நிலையில் மகன் மனோஜ் மரணத்திற்கு பிறகு பாரதிராஜா மன நிலையில் மிகவும் தளர்வடைந்து விட்டார் .பெரும்பாலும் யாரிடமும் அவர் பேசுவதில்லை என்ற நிலைக்கு தள்ளப்பட்டு விட்டார்
மனோஜ் மறைவு அவரை நிலை குலைய வைத்து விட்டதாக பாரதிராஜாவை சந்தித்த பலரும் வெளியே தகவல்கள் தெரிவித்து வருகிறார்கள் .பாரதிராஜாவின் நிலை குறித்து அவரது சகோதரர் ஜெயராஜ் சில தகவல்களை வெளியிட்டு இருக்கிறார் அது தமிழ் ரசிகர்களை மிகப்பெரிய அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது அதாவது பாரதிராஜா தனது மகன் நினைவில் எப்போதும் கண்ணீர் வடித்து வருகிறார் கடந்த மூன்று வருடங்களாகவே அவரது உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறது மனவேதனையால் அவர் சோர்ந்து விட்டார் .மனோஜ் நினைவால் தன்னுடைய நினைவாற்றலை அவர் மெல்ல மெல்ல இழந்து வருகிறார் .அவருக்கு எப்போதாவது நினைவாற்றல் வருகிறது மற்றபடி நினைவில்லாமல் இருக்கிறார் இதனால் வெளியாட்கள் மற்றும் சினிமா துறையினர் யாரையும் நாங்கள் சந்திக்க அனுமதிப்பதில்லை என்று கூறியிருக்கிறார் .
இதே போல் பாரதிராஜாவை சந்தித்து வந்த பலரும் அவர் முன்பு போல் இல்லை மிகவும் உடல் மெலிந்து விட்டார். அவரது உடல்நிலை மிகவும் மோசமாக இருக்கிறது அவரால் சரியாக பதில் பேச முடியவில்லை என தெரிவித்துள்ளனர்
இதற்கிடையே பிரபல நடிகை ஒருவர் இயக்குனர் பாரதிராஜாவை அவரது வீட்டில் சந்தித்து பேசி இருக்கிறார் அவர் தனது கருத்தை தெரிவிக்கும் பொழுது பாரதிராஜா மிக நல்ல மனநிலையில்தான் இருக்கிறார். என்னிடம் நன்றாக பேசினார். அவர் இயக்கிய பழைய படங்கள் குறித்து எல்லாம் என்னிடம் நீண்ட நேரம் பேசினார் என்று தகவல் தெரிவித்து இருக்கிறார். தற்பொழுது இயக்குனர் பாரதிராஜா நீலாங்கரையில் தனது சொந்த வீட்டில் வசித்து வருகிறார்
Advertisements



