ஐப்பான் தலைநகர் டோக்கியோ விமான நிலையத்திற்கு வருகை தந்த அதிபர் டிரம்பிற்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அமெரிக்க அதிபர் டிரம்ப் ஐந்து நாட்கள் ஆசிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட நிலையில் மலேசியாவில் ஆசியான் மாநாட்டில் கலந்து கொண்டார். இதன் பின்னர், ஜப்பானுக்கு சென்றடைந்தார். தொடர்ந்து தலைநகர் டோக்கியோ விமான நிலையத்திற்கு வருகை தந்த அதிபர் டிரம்பிற்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதை அடுத்து, ஜப்பான் மன்னர் நருஹிட்டோவை டோக்கியாவில் உள்ள அரண்மனைக்கு சென்று அதிபர் டிரம்ப் சந்தித்தார். அப்போது அவருக்கு அங்கு சிறப்பு விருந்து வழங்கப்பட்டது. தொடர்ந்து, ஜப்பான் நாட்டின் முதல் பெண் பிரதமர் சனே தகேச்சியை சந்தித்து டிரம்ப் நாளை பேச்சுவார்த்தை நடத்துகிறார். அப்போது அமெரிக்கா மீதான ஜப்பானின் 46 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டை உறுதி செய்வதற்கான பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து, அமெரிக்கா சோயபீன் மற்றும் போர்டு நிறுவனத்தின் அதிநவீன எப்-150 ரக கார்களை மானிய விலையில் கொள்முதல் செய்ய அறிவுறுத்தப்படவுள்ளது.

