Nayanthara: மகனை தாலாட்டும் வீடியோ!

நயன்தாரா மகனை மடியில் படுக்க வைத்துத் தாலாட்டும்  வீடியோ!

நடிகை நயன்தாரா, தனது மகனை மடியில் படுக்க வைத்துத் தாலாட்டித் தூங்க வைத்ததை வீடியோவாக எடுத்து விக்னேஷ் சிவன் வெளியிட்டு உள்ளார்.

தமிழ் திரையுலகில் டாப் ஹீரோயினாக வலம் வருபவர் நயன்தாரா. இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து கடந்த திருமணம் செய்துகொண்ட இவருக்கு உயிர், உலக் என இரட்டை ஆண் குழந்தைகளும் உள்ளன. இந்த இரண்டு குழந்தைகளையும் வாடகைத் தாய் மூலம் பெற்றுக் கொண்டார் நயன்தாரா. உயிர், உலக் இருவருக்கும் தற்போது 1 வயது ஆகிறது. அண்மையில் தான் இருவரது முதல் பிறந்தநாளை நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஜோடி கோலாகலமாகக் கொண்டாடியது.

நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவில் அரை டஜன் படங்களுடன் பிசியாக நடித்து வந்தாலும், தன் மகன்களுடன் நேரத்தைச் செலவிட தவறுவதில்லை. தற்போது நடிகை நயன்தாரா, மண்ணாங்கட்டி என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை யூடியூப்பர் டியூடு விக்கி என்பவர் இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானலில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் நயன்தாரா உடன் யோகிபாபுவும் நடிக்கிறார்.

இதுதவிர இந்தியிலும் ஒரு படத்தில் நடிக்கக் கமிட் ஆகியுள்ளாராம் நயன். ஜவான் படத்தின் வெற்றிக்குப் பின்னர் நயனுக்கு பாலிவுட்டிலும் மவுசு அதிகரித்து உள்ளதாம். இதனால் பான் இந்தியா அளவில் பிசியான ஹீரோயினாக வலம் வரும் நயன்தாரா, தன் மகனைத் தாலாட்டி உறங்க வைக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், நீச்சல் குளம் அருகே இருக்கையில் கால் நீட்டி அமர்ந்துள்ள நயன்தாரா, தன்னுடைய மகன் உயிரை மடியில் படுக்க வைத்து, அவரைத் தாலாட்டித் தூங்க வைக்கிறார். இதனை வீடியோ எடுத்துள்ள விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் ஹார்ட்டின் எமோஜிகளை பறக்கவிட்டு வருகின்றனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *