Oviya:இணையத்தில் கசிந்த ஆபாச வீடியோ? யாரும் எதிர்பார்க்காத பதில் அளித்த நடிகை !

ஓவியாவின் அந்தரங்க வீடியோ என்ற பெயரில் ஆபாச வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

சென்னை:தமிழில் ‘களவாணி’ படத்தில் அறிமுகமாகி தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ள ஓவியா பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றும் பிரபலமானார். இந்த நிலையில் ஓவியாவின் அந்தரங்க வீடியோ என்ற பெயரில் ஆபாச வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. சில ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் ஓவியாவை டேக் செய்து இந்த வீடியோ உண்மையானதுதானா? வீடியோவில் இருப்பது நீங்கள்தானா? என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள். அதற்கு ஓவியாவும் பதிலடி கொடுத்து வருகிறார்.

ஒரு ரசிகர், ‘உங்களுடையை 17 வினாடி வீடியோ லீக் ஆகி உள்ளது மேடம்’ என்று தெரிவிக்க அதற்கு ஓவியா, ‘என்ஜாய்’ என்று பதில் அளித்துள்ளார். இன்னொருவர், ‘வீடியோவை இன்னும் நீளமாக எடுத்து இருக்கலாம்’ என்று சொல்ல ‘அடுத்தமுறை புரோ’ என்று பதில் அளித்துள்ளார். மேலும் சிலர் லீக்கான ஓவியாவின் வீடியோவை தங்களுக்கு அனுப்புமாறு கேட்க அதற்கு பதில் அளிக்கும் வகையில் ‘எனக்கும் லிங்க் அனுப்புங்கள்’ என்று ஓவியா பதில் அளித்துள்ளார்.

பொதுவாக ஆபாச வீடியோக்கள் வெளியாகும்போது அதில் இருப்பது நான் இல்லை என்று நடிகைகள் மறுப்பது வழக்கம். ஆனால் ஓவியா வேறு விதமாக பதில் அளித்து இருப்பது பரபரப்பாகி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *