
நடிகை ஓவியாவின் அசத்தாலான புகைப்படங்கள் இணையத்தில் வேகமாகப் பரவி வருகின்றது. அதுகுறித்து இந்தத் தொகுப்பில் காணலாம்.
நடிகை ஓவியா தமிழ் சினிமாவில் களவாணி படத்தின் மூலம் அறிமுகமானார். இந்தப் படத்தில் ரசிகர்களின் மனம் கவரும் நடிப்பினை வெளிப்படுத்தித் தனது முதல் படத்திலேயே நல்ல அறிமுகத்தினைப் பெற்றார்.
ஓவியாவின் இயற்பெயர் ஹெலன் நெல்சன். சினிமாவிற்காக ஓவியா என மாற்றி வைத்துக் கொண்டார். இவருக்குத் தமிழ் சினிமா ரசிகர்களைக் கடந்து சின்னத்திரை ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைத்தது.
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் தமிழ் சீசன் ஒன்றின் மிகவும் முக்கியமான போட்டியாளராக மாறினார். இவரது நடவடிக்கைகள் ரசிகர்களுக்குப் பிடித்துப் போனதால் ரசிகர்கள் இவருக்கு ஓவியா ஆர்மி தொடங்கி ஓவியாவுக்கு ஆதரவு அளித்தனர்.
மெரினா, களாவானி, முடர் கூடம், மதயானைக் கூட்டம் எனப் பல்வேறு ஹிட் படங்களில் நடித்துள்ளார். தமிழில் அறிமுகமாவதற்கு முன்னர் மலையளத்திலேயே இரண்டு படங்களில் நடித்துள்ளார்.

தமிழ், மலையாளம் மட்டுமில்லாமல் தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிப்படங்களிலும் நடித்துள்ளார். இவருக்குத் தென்னிந்தியாவில் ரசிகர்கள் பட்டாளம் உள்ளனர்.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பின்னர் மிகவும் கவனிக்கத் தகுந்த பிரபலமாக மாறினார். இவரை இன்ஸ்டாகிரமில் மட்டும் கிட்டத்தட்ட 7 லட்சம்பேர் பின் தொடருகின்றனர்.
ஒரு கட்டம்வரை ஹோம்லி கதாபாத்திரங்களில் நடித்து வந்த ஓவியா, அதன் பின்னர் கவர்ச்சியில் களமிறங்கினார்.
படங்களில் நடித்து வந்தாலும் இவருக்குத் தொடர் வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. இதனால் சினிமாவிலிருந்து கொஞ்சம் விலகியே உள்ளார்.
இவருக்கு அதிகம் ஊர் சுற்றும் பழக்கம் இருப்பதால் இந்தியா மட்டுமில்லாமல் வெளிநாடுகளுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றார்.
அங்கு அவர் எடுத்துக் கொள்ளும் புகைப்படங்களைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகின்றார். அதற்கு ரசிகர்கள் லைக்குகளை வாரி வழங்கி வருகின்றனர்.


