இவ்வளவு சத்துக்கள் கொட்டிக்கிடைக்கிறதா..? கருப்பை கோளாறு முதல் ரத்தசோகை வரை விலகும்!

Advertisements

பனங்கிழங்கில் நார்சத்துக்கள் அதிகமாக உள்ளதால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.. இதனால், மலச்சிக்கல் தொந்தரவும் தீரும்.. ஒமேகா 3 சிறந்த மூலமாக உள்ள பனங்கிழங்குகள், உடலில் நல்ல கொலஸ்ட்ராலை பெருக்குகிறது.. இது இதயத்துக்கு ஆபத்துக்களையும் குறைக்கின்றன.. உடலிலுள்ள செல்களை பராமரித்து, உறுப்புகளையும் பழுதாகாமல் பாதுகாக்கிறது. அதிகமாக பெண்களை அச்சுறுத்தி கொண்டிருக்கிறது புற்றுநோய் ஆனால், ஆண்டி ஆக்சிடன்ட் நிறைந்துள்ள பனங்கிழங்குகளில், வைட்டமின் A, அமினோ அமிலங்கள், புரோட்டீன் நிறைந்துள்ளதால், புற்றுநோய் அபாயத்தை குறைக்க செய்கின்றன. அதுமட்டுமல்ல, ரத்த சோகை என்பது பெரும்பாலான பெண்களுக்கு உள்ள பிரச்சனையாகும்.

மாதவிடாய் நேரத்தில் அதிக ரத்தப்போக்கு இருந்தாலோ அல்லது இரும்புச்சத்து உடலில் குறைவாக இருந்தாலோ அதற்கும் இந்த பனங்கிழங்கு உதவுகிறது. அந்தவகையில், 35 வயதை கடந்தவர்கள், மெனோபாஸ் காலகட்டத்தை எட்டுபவர்கள், பனங்கிழங்கு சாப்பிட வேண்டும். இதனால், புதிய ரத்தம் உற்பத்தியாவதுடன், ரத்த செல்களும் பராமரிக்கப்படும்.பனங்கிழங்கில் சத்துமிகுந்த வேதிப்பொருள் ஒன்று உள்ளது. இந்த வேதிப்பொருள் இன்சுலின் உற்பத்தியை அதிகரித்து சர்க்கரையின் அளவினை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.. எனவேதான், நீரிழிவு நோயாளிகளும் பனங்கிழங்கினை சாப்பிடலாம் என்கிறார்கள்.

அதுமட்டுமல்ல, பனங்கிழங்கில் உள்ள சில சத்துக்கள் இன்சுலின் உற்பத்தியை அதிகரிக்க செய்வதாக சொல்கிறார்கள். எனவே, மருத்துவர்களின் ஆலோசனையின்பேரில், குறைவான அளவு பனங்கிழங்கை எடுத்து கொள்ளலாம்.எலும்பு தொந்தரவு உள்ளவர்கள், வாதம் பிரச்சனையில் அவதிப்படுபவர்கள், பனங்கிழங்கு தாராளமாக சாப்பிடலாம்.. இதில், கால்சியம் நிறைந்துள்ளதால், பற்களுக்கும், எலும்புகளுக்கும் வலிமையை தருகின்றன.முக்கியமாக, மெக்னீசியம் சத்து உள்ளதால், எலும்புகள் ஆரோக்கியமாக வைத்திருக்க தூண்டுகிறது.

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *