
தேசிய நுகர்வோர் தினமாக இன்று டிசம்பர் 24- ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. பொருட்களை விலை கொடுத்து வாங்குவோர் நுகர்வோர் ஆவர். விற்பனை செய்பவர் விற்பனையாளர்.
ஒரு பொருளை விலை கொடுத்து வாங்கும் போது, வியாபாரியால் விற்கப்படும் பொருள் தரமானதாக மேலும் காலாவதியானதாக இல்லாததாகவும் இருக்க வேண்டும். மேலும் நுகர்வோர் பாதுகாப்பு சட்டமானது 1986 – ஆம் ஆண்டு நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது.
இந்த நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் இயற்றப்பட முக்கிய நோக்கமே நுகர்வோரின் நலத்தை முன்னிட்டும் , சேதமுற்ற பொருட்கள், மற்றும் சட்டத்துக்கு புறம்பான விலை, மற்றும் தடை செய்யப்பட்ட பொருள் விற்பனை , மோசடி விலை, போன்றவற்றால் பொது மக்கள் பாதிக்கப்பட கூடாது என்ற நோக்கத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது.
கடந்த சில வருடங்களாக பொருளாதாரம் சற்றே வீழ்ச்சி அடைந்துள்ளது. இது குறித்து ஆய்வில் இந்தியாவில் மக்களிடையே எப்படி பொருள்களை விற்பனையில் போட்டி, விற்பனையை அதிகரிப்பது, ஆன்லைன் விற்பனை , டிஜிட்டல் சேவை குறித்து நல்ல கருத்துக்கள் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நுகர்வோர்களின் நம்பிக்கையினை பெறவும், வணிகத்தை பெருக்கவும் வியாபாரிகள் முயல வேண்டும். அதே சமயம் நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. வளர்ந்து வரும் டிஜிட்டல் வணிகத்தினை கருத்தில் கொண்டு புது நடைமுறைகள் கொண்டு வரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மிகவும் மேம்படுத்தப்பட்ட சட்டமானது ஆகஸ்டு 6- ஆம் தேதி, 2019- ஆம் தேதி பாராளுமன்றத்தில் மாற்றி அமைக்கப்பட்டது.
திருத்தம் செய்யப்பட்ட மசோதாவானது CPA 2019, பாராளுமன்றத்தில் ஜனாதிபதியால் அமலுக்கு வர கையொப்பமிடப்பட்டது. நுகர்வோர் அமைச்சகம் மற்றும் உணவு பொது பரிமாற்றம் குறித்த மசோதாவானது ஜூலை 20, 2019 -ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்பட்டது.
சட்டத்தின்படி வணிகர் விற்பனையானது வெளிப்படையானதாக இருக்க வேண்டும். மக்களுக்கு நல்ல தரமான பொருட்களை சரியான விலைக்கே தர வேண்டும் . இச்சட்டம் சிறு கடைகளில் வாங்கப்படும் சிறிய பொருள் முதல் கார் உள்ளிட்ட விலையுயர்ந்த பொருட்கள் விற்கும் அனைத்து விற்பனையாளர்களுக்கும் பொருந்தும்.
பழுதடைந்த பொருள், காலாவதியான பொருள் விற்பனை அநியாய விலை இவை எதுவாயினும் மக்கள் நுகர்வோர் நீதிமன்றத்தில் புகார் கொடுத்து நிரூபிக்கும் பட்சத்தில் சரியான தீர்வு கிடைப்பதோடு மீண்டும் இதுபோன்ற தவறு நடக்காமல் பார்த்துக் கொள்ள முடியும்.
நன்மைகள்;
கெட்டுப்போன பொருட்கள் விற்பனை, அனைத்து உற்பத்தி பொருட்களின் விலை, விலை பேரம் பேசி வாங்குதல், கல்வி சம்பந்தப்பட்ட தொகை, போன்றவற்றை உறுதி செய்தல் ஆகியவை மக்களுக்கு பேருதவியாக இருக்கும்.
ஒரு சில கடைகளில் நிர்ணயிக்கப்பட்ட விலையைக் காட்டிலும் அதிக விலைக்கு விற்பதையும், கல்வி நிறுவனங்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதையும் தடுக்கிறது இந்த சட்டம்.
மக்கள் பாடுபட்டு உழைத்த பணம் நல்ல முறையில் செலவிட நுகர்வோர் சட்டம் பயனளிக்கிறது. தேசிய நுகர்வோர் தினம் இன்று அனுசரிக்கப்படுவது அனைவருக்கும் நல்லதே என்பதில் ஐயமில்லை.


