DD3 Movie Heroine: DD3 ஹீரோயின் யார் தெரியுமா?

Advertisements

நடிகர் தனுஷ் எதைத் தொட்டாலும் அது வெற்றி தானெனக் கூறலாம்.

ஆம், அண்ணாவின் இயக்கத்தில் அறிமுகம் ஆகி அதன் பின்னர் படிப்படியாக ஒவ்வொரு இடங்களைக் கடந்து இன்று ஹாலிவுட் படத்தில் நடித்துள்ளது வரை அவரின் வளர்ச்சி வேறொரு உச்சத்தில் உள்ளது என்றால் அது அவரின் திறனை மட்டுமே சுட்டி காட்டுகிறது.

ஒவ்வொரு படத்துக்கும் அல்லது ஒவ்வொரு பணிக்கும் அவர் எடுத்துக் கொள்ளும் முனைப்பு தான் தனுஷ் அவர்களைச் சிறந்த நடிகராக, சிறந்த படைப்பாளியாக நிலை நிறுத்தி உள்ளது எனலாம்.

தற்போது டஜன் கணக்கில் படங்களில் பிஸியாக உள்ள தனுஷ் படங்கள்குறித்து அடுத்து தொடர் அப்டேட்ஸ் வந்துள்ளது. ஆம், வருகிற பொங்கல் பண்டிகைக்கு வெளியாக உள்ள “கேப்டன் மில்லர்” படத்திலிருந்து “உன் ஒளியிலே” பாடல் புரோமோ நேற்று வெளியாகிய நிலையில் இன்று முழு பாடலும் மாலை 5 மணிக்கு வெளியாக உள்ளது.

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ், பிரியங்கா மோகன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள “கேப்டன் மில்லர்” பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பி உள்ளது எனலாம். இது ஒரு பக்கம் இருக்க இன்னொரு இயக்குனர தனுஷ் படம்குறித்த தகவல் கசிந்து உள்ளது.

ஆம், அது தனுஷ் சகோதரியின் மகன் ஹீரோவாக நடிக்கும், அதாவது தனுஷ் இயக்கத்தில் அறிமுகமாகும் படத்தில் நடிகை அனிகா சுரேந்திரன் தான் ஹீரோயினாக நடிக்க உள்ளாராம்.

மேலும், இது தனுஷ் இயக்கும் மூன்றாவது படமாகும். இதைப் பணிகள் ஓசையின்றி நடந்து வரும் நிலையில், இதன் அறிவிப்பு நாளை வெளியாக உள்ளது குறிப்பிடதக்கது. அதே போலத் தனுஷ் 50, அதாவது தனுஷ் இயக்கும் இரண்டாவது படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம் அடுத்த வருடம் தனுஷ் நடிப்பு மற்றும் இயக்கத்தில் உருவாகும் படங்களின் தொடர் வெளியீடுகள் தனுஷ் ரசிகர்களைப் பரவசம் அடைய வைத்துள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *