Sai Pallavi: இரண்டு சூப்பர் ஸ்டார் படங்களைப் புறக்கணித்த சாய் பல்லவி!

மொழிகளைக் கடந்து ஒவ்வொரு நடிகைக்கும் அந்தந்த மொழியில் பிரபலமான ஸ்டார்களோடு நடிப்பது என்பது தான் அவர்களின் கலை கனவாக இருக்கும்.

அது தான் அவர்களின் எண்ணத்தின் படி தான் சாதித்த ஒன்றாக இருக்கும். அதுவே அவர்களின் திரை பயணத்தின் ஒரு முக்கிய அங்கமாக அவர்கள் பார்ப்பதுண்டு. இதற்கு எந்த நடிகையும் விதி விலக்கல்ல. ஆனால், சில நடிகைகள் சரியான கதைகளை மட்டுமே தேர்வு செய்து அது தோற்றால் கூடப் பரவாயில்லை எந்தச் சமரசமும் செய்து கொள்ள மாட்டேன் எனக் கூறி விடுவதும் உண்டு. அதில் முக்கியமான தலை சிறந்த நடிகையாகப் பல மொழிகளில் வலம் வரும் சாய் பல்லவி.

ஆம், அடிப்படையில் இவர் ஓர் மலையாளி என்றாலும் கூடத் தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் தற்போது பிஸியாக நடித்து வருகிறார். ஆனால், கதை தேர்வில் மட்டும் கூடுதல் கவனத்தை செலுத்தி வருகிறார். 2005 ஆம் ஆண்டு தமிழ் மொழியில் அறிமுகமான இவர், தொடர்ச்சியாகத் தற்போது வரை தன் திறனுக்கு ஏற்றக் கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து நடித்து வருகிறார்.

இவரைப் பற்றிய ஒரு சுவாரசிய செய்தி வந்துள்ளது. அது என்னவென்றால், இவர் விஜய், அஜித் படங்களை நிராகரித்து விட்டார் என்பதுதான். ஆம், அதுவும் இந்த வருடத்தின் இரண்டு பிளாக் பஸ்டர் படங்களைத் தான் அவர் நிராகரித்தார் என்றால் நம்ப முடிகிறதா. ஆம், அது துணிவு மற்றும் லியோ படங்கள் தான்.

துணிவு திரைப்படத்தில் இடம்பெற்ற மஞ்சு வாரியர் நடித்த ரோல் முதலில் சாய் பல்லவியிடம் தான் சென்றதாம். அப்போது கதையைக் கேட்ட அவர் தனக்கு இப்படத்தில் எந்த ஸ்கோப்பும் இல்லை அதாவது துணிவு படத்தில் தனக்கு சொல்லிக் கொள்ளும் அளவுக்குக் காட்சிகள் இல்லையெனக் கூறி அனுப்பி விட்டாராம். அதன் பின்னர் ஹெச் வினோத் அவர்கள் கதையில் சில மாற்றங்களைச் செய்து, மஞ்சு வாரியாரை அணுகி கதை கூறி ஓகே செய்து விட்டார். அதன் பின்னர் துணிவு திரைப்படத்தின் வசூல் பல கோடிகளை அள்ளிய கதை வரலாறு.

அதே போலத் தான் விஜய் 67, அதாவது லியோ படம் உறுதியான பின்னர், லோகேஷ் அவர்கள் திரிஷா நடித்த ரோலை, சாய் பல்லவி இடம் கூறி உள்ளாராம். அதைக் கேட்ட அவர், இந்தக் கதையில் எனக்குச் சுவாரசியம் தரும் காட்சிகள் இல்லை, அப்படி இருந்தால் மட்டுமே என்னை அணுகுங்கள் எனக் கூறி அனுப்பி விட்டாராம். அதன் பின்னர் திரிஷாவிடம் இந்தக் கதை சென்று அவர் லியோ படத்தின் வெற்றிக்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்தார் என்பது பின் கதை.

இந்த இரண்டு படங்களிலும் நடிக்கச் சாய் பல்லவிக்கு இதுவரை அவர் வாங்காத சம்பளம் பேசப்பட்டது என்றும், அதெல்லாம் தேவையே இல்லை என்பது போல, பணத்தை பொருட்டாக நினைக்காமல், நல்ல ரோல் இருந்தால் மட்டுமே நடிப்பேன் என்பதில் விடப் பிடியாக இருந்துள்ளார் என்பதே அவரின் கலை தாகத்தின் போக்கைக் காட்டுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *