இளைஞர்களின் எதிர்காலம் மற்றும் அவர்களின் நலனைவிட வேறொன்றும் முதன்மையானது இல்லை என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
தில்லியில் நீட் தேர்வு முறைகேட்டைக் கண்டித்துப் போராட்டம் நடத்திய இளைஞர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது. தடியடியைக் கண்டித்து நாடு முழுவதும் போராட்டம் வலுப்பெற்றதையடுத்துப் பிரதமர் நரேந்திர மேடி சமூக வலைத்தளத்தில் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், இளைஞர்களின் எதிர்காலம் மற்றும் அவர்களின் நலனைவிட வேறொன்றும் முதன்மையானது இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
நீட் தேர்வு வினாத்தாள் முன்கூட்டி வெளியானது குறித்து விரைந்து விசாரித்து அதில் தொடர்புடைய குற்றவாளிகளுக்குக் கடும் தண்டனை பெற்றுத் தர விரைவு நீதிமன்றங்கள் அமைக்கத் தீர்மானித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாகத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும்படி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மாணவர்களின் நலனைக் காக்கத் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார். மாணவர்களின் எதிர்காலத்துக்குத் தீங்கிழைக்க முயலும் யாராக இருந்தாலும் அவர்களைத் தண்டிக்கப்போவதாக உறுதியளித்துள்ளார்.


