டெங்கு பாதிப்பு அதிகளவில் உள்ள மாவட்டங்களில் கள ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபையில் அமைச்சர் அருண்ராஜ் உரையாற்றினார். அப்போது, தமிழகத்தில் டெங்கு பரவல் முக்கிய சுகாதார பிரச்சினையாக இருந்து வருவதாகவும், நடப்பாண்டில் தற்போது வரை 14 ஆயிரத்து 581 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். டெங்கு பரவாமல் தடுக்க முதற்முறையாக அறிவியல் ஆய்வு நடத்த திட்டமிட்டுள்ளாதாகக் கூறினார். டெங்கு பாதிப்பு அதிகளவில் உள்ள மாவட்டங்களில் கள ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
43 லட்சம் ரூபாய் செலவில் நடைமுறைப்படுத்தப்பட உள்ள ஆய்வில் டெங்கு கொசு பரவலை கட்டுப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள், குறித்து ஆய்வு செய்யப்படும் என்று கூறினார். பொதுமக்களும் வீடுகளை சுத்தமாக வைத்திருத்தல், தண்ணீர் தேங்காமல் இருப்பதை உறுதிசெய்தல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டு கொண்டார்.



