இந்தியாவுடனான உறவு மிகவும் முக்கியமானது – ஈரான் வெளியுறவு அமைச்சகம் கருத்து!

இந்தியாவுடனான தனது உறவு முக்கியத்துவம் வாய்ந்தது என்று ஈரான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயி தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளை மீறும் வகையில், ஈரானுக்கு எந்த நாடாவது உதவினாால், அந்த நாடுகள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்போம் என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ எச்சரித்திருந்தார். இந்நிலையில், மத்திய ஆசிய நாடான கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கெக்கில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சி மாநாட்டில், பிரதமர் நரேந்திர மோடி, ஈரானின் அதிபர் மசூத் பெஷெஷ்கியான சந்தித்து பேசினார்.
இதுகுறித்து ஈரான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயி,  இந்தியா, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மற்றும் பிரிக்ஸ் ஆகிய இரண்டிலும் உறுப்பினராக உள்ளதாகத் தெரிவித்துள்ளார். வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நாம் நல்லுறவைப் பேணிவரும் நாடுகளில் இதுவும் ஒன்றாகும் என்று குறிப்பிட்டுள்ளார். இந்தியாவுடனான தனது உறவு முக்கியத்துவம் வாய்ந்தது என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *