அண்ணா, எம்.ஜி.ஆர் கட் அவுட்டினால் சர்ச்சை..!

தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாட்டில், அண்ணா, எம்.ஜி.ஆர். கட் அவுட் சர்ச்சைக்கு தவெக துணைப் பொதுச்செயலாளர் விளக்கம் அளித்துள்ளார்.

மதுரை மாவட்டம் பாரபத்தியில், தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு நடக்க உள்ளது. இதன் ஏற்பாடுகள் பாரபத்தியில் 506 ஏக்கரில் மாநாட்டுக்கான ஏற்பாடுப் பணிகள் நடந்துள்ளது.

இதில், அண்ணா, எம்.ஜி.ஆர். கட் அவுட்களுடன் விஜய் கட் அவுட்டும் நிறுவப்பட்டுள்ள நிலையில், சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து மாற்றுக்கட்சித் தலைவர்களின் புகைப்படங்களைப் பயன்படுத்தலாமா என்றக் கேள்வி எழுந்துள்ள நிலையில், தவெக துணைப் பொதுச்செயலாளர் நிர்மல்குமார் இதற்கான விளக்கத்தைத் தெரிவித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், அண்ணாவும், எம்.ஜி.ஆரும் பொதுவான தலைவர்கள் என்பதால் படத்தை பயன்படுத்தியுள்ளதாகத் தெரிவித்தார். மேலும், விஜயகாந்த் புகைப்படங்களை எங்கும் பயன்படுத்தவில்லை என்றும் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *