இளைஞர்களின் எதிர்காலத்தைப் பாழாக்கியவர் மோடி – ராகுல் காந்தி குற்றச்சாட்டு!

நமது இளைஞர்களின் எதிர்காலத்துக்கு அதிகப் பாதிப்பை ஏற்படுத்தியவர் பிரதமர் மோடி தான் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.

நீட் தேர்வு தொடர்பாகச் சமூக வலைத்தளத்தில் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள அறிக்கையை மேற்கோள் காட்டி ராகுல் காந்தி ஒரு பதிவிட்டுள்ளார். அதில், நமது இளைஞர்களின் எதிர்காலத்துக்கு அதிகப் பாதிப்பை ஏற்படுத்தியவர் பிரதமர் மோடி தான் என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.

நமது கல்வி முறையை ஒட்டுமொத்தமாகக் கைப்பற்றவும் அழிக்கவும் அனுமதித்ததும் ஊக்குவித்ததும் நீங்கள்தான் என்றும், அதற்குப் பொறுப்பான ஒவ்வொருவரையும் காத்ததும் நீங்கள்தான் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தர்மேந்திர பிரதானை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும், மாணவர்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும், மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே தங்கள் கோரிக்கைகள் ஆகும் என்று ராகுல்காந்தி குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *