ஹாங் காங் அணியை வீழ்த்தி பாகிஸ்தான் மகளிர் அணி அபார வெற்றி!

மகளிர் ஆசியக் கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் 11ஆவது போட்டியில் ஹாங் காங் அணியை வீழ்த்தி பாகிஸ்தான் மகளிர் அணி வெற்றி பெற்றுள்ளது.
துபாயில் மகளிர் ஆசியக் கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் 11ஆவது போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் ஹாங் காங் மகளிர் அணிகள் மோதின. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து, 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 143 ரன்களை எடுத்தது. இதில், சிறப்பாக விளையாடிய ஷவால் ஜுல்ஃபிகார் 47 ரன்கள் எடுத்து அசத்தினார்.
இதையடுத்து, 144 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஹாங் காங் அணி 19 ஓவர்களில் 71 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன்மூலம், பாகிஸ்தான் அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் ஹாங் காங் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *