Narendra Modi: சர்தார் வல்லபாய் பட்டேலின் சிலைக்கு மரியாதை!

ஜனாதிபதி திரவுபதி முர்மு,பிரதமர் மோடி, ராகுல் காந்தி உள்ளிடோர் மலர் தூவி மரியாதை!

குஜராத்தில் உள்ள சர்தார் வல்லபாய் பட்டேலின் சிலைக்கு பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

ஆமதாபாத்: துண்டுபட்டு கிடந்த ராஜ்ஜியங்களை இணைத்த பெருமைக்குரியவர் இந்தியாவின் இரும்பு மனிதர் என வர்ணிக்கப்படும் சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த தினம் இன்று நாடு முழுவதும் ஒற்றுமை தினமாக கொண்டாடப்படுகிறது.

டெல்லியில் உள்ள சர்தார் படேல் நினைவிடத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு அங்கு வைக்கப்பட்டிருந்த உருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர், உள்துறை மந்திரி அமித்ஷா, டெல்லி ஆளுநர் வி.கே.சக்சேனா, மத்திய மந்திரி மீனாட்சி லேகி உள்பட பலர் பங்கேற்றனர்.


அதனைத்தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சோனியா காந்தி, ராகுல் காந்தி எம்.பி., ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

இந்தநிலையில் அவரது பிறந்தநாளையொட்டி நர்மதா நதிக்கரையில் அமைக்கப்பட்டுள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் சிலைக்கு பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார். பிறந்தநாளை முன்னிட்டு குஜராத்தில் பிரதமர் மோடி பல்வேறு நலத்திட்ட பணிகளை துவக்கி வைக்கவுள்ளார். ஒற்றுமையை வலியுறுத்தும் உலகிலேயே மிகப்பெரிய பட்டேல் சிலை நர்மதா நதிக்கரையில் அமைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *