Advertisements

தமிநாடு சட்டமன்றத் தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கிவிட்டது கூட்டணி ஒரு பக்கம் பேச்சுவார்த்தை நடைபெற்றாலும் மறுபக்கம் வேட்பாளர்கள் பட்டியலும் தயாராகி வருகிறது அந்த வகையில் அதிமுக தரப்பில் 164 தொகுதிகளில் போட்டியிடப் போவதாக தெரியவந்திருக்கிறது.
இது மட்டுமல்லாமல் எந்தெந்த தொகுதியில் யார் யார் போட்டியிடுகிறார்கள் என்கிற வேட்பாளர்கள் பற்றிய விவரங்களும் தெரிய வந்திருக்கிறது அதிமுக விங்க் அமைப்பிலிருந்து இந்த தகவல் வெளியே கசிந்து இருக்கிறது.
தமிழ்நாடு சட்டசபை தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் நடைபெறுகிறது இந்த தேர்தலில் திமுக கூட்டணி அதிமுக கூட்டணி தமிழக வெற்றி கழகம் நாம் தமிழர் என நான்கு முனை போட்டி நிலவுகிறது.இந்த நிலையில் வருகிற பிப்ரவரி 24ஆம் தேதி முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாளை ஒட்டி அதிமுக தரப்பில் வேட்பாளர் பட்டியலை எடப்பாடி பழனிச்சாமி முதல் கட்டமாக வெளியிட இருக்கிறார்.
அந்த வகையில் ஐந்தாம் எண் ராசி என்பதால் முதல் கட்டமாக 41 தொகுதிகளுக்கு உண்டான வேட்பாளர்கள் அறிவிக்கப்படுகிறார்கள் .யார் யார் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுகிறார்கள் என்பது குறித்து இப்போது பார்க்கலாம்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி எடப்பாடி தொகுதியில் போட்டியிடுகிறார் கே.பி முனுசாமி வேப்பநன ஹள்ளி தொகுதியில் போட்டியிடுகிறார் நத்தம் விஸ்வநாதன் நத்தம் தொகுதியிலும் திண்டுக்கல் சீனிவாசன் திண்டுக்கல் தொகுதியிலும் போட்டியிடுகிறார்கள்.
எஸ்பி வேலுமணி தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிடுகிறார் தங்கமணி குமாரபாளையம் தொகுதியில் போட்டியிடுகிறார்.முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு முன்னதாக வேறு தொகுதி ஒதுக்கப்பட்டு இருந்தது ஆனால் அவர் போர் கொடி பிடித்ததால் மீண்டும் அவருக்கு ராயபுரம் தொகுதி ஒதுக்கப்பட்டிருக்கிறது.
சி.பி சண்முகம் விழுப்புரம் தொகுதியில் போட்டியிடுகிறார் முன்னாள் பெண் அமைச்சர் பா. வளர்மதி ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடுகிறார் ஆர்பி உதயகுமார் திருமங்கலம் தொகுதியில் போட்டியிடுகிறார்.சி விஜயபாஸ்கர் விராலிமலை தொகுதியில் போட்டியிடுகிறார் வைகைச் செல்வன் அருப்புக்கோட்டை தொகுதியில் போட்டியிடுகிறார்.
இதேபோல் பருகூர் தொகுதியில் தம்பித்துரை போட்டியிடுகிறார் நன்னிலம் தொகுதியில் ஆர் காமராஜ் போட்டி இருக்கிறார் வேதாரணியம் தொகுதியில் ஓ எஸ் மணியன் போட்டியிடுகிறார் பாலக்கோடு தொகுதியில் கேபி அன்பழகன் போட்டியிடுகிறார்.
ஜோலார்பேட்டை தொகுதியில் கே சி வீரமணி போட்டியிடுகிறார் கரூர் தொகுதியில் எம் ஆர் விஜயபாஸ்கர் போட்டியிடுகிறார்.
முன்னதாக கோவில்பட்டி தொகுதியை பாரதிய ஜனதா கட்சிக்கு ஒதுக்கலாம் என திட்டமிடப்பட்டது இதற்கு கடம்பூர் ராஜு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் மீண்டும் அவருக்கு கோவில்பட்டி தொகுதி ஒதுக்கப்பட்டிருக்கிறது ஆகவே கோவில்பட்டி தொகுதியில் கடம்பூர் ராஜு போட்டியிடுகிறார்.
சிவகாசி தொகுதியில் தான் போட்டியிடுவேன் என்று டி ராஜேந்திர பாலாஜி போர்க்கொடி பிடித்து வந்தார் எனவே சிவகாசி தொகுதியில் டி ராஜேந்திர பாலாஜி போட்டியிடுகிறார் மேட்டுப்பாளையம் தொகுதியில் ஏகே செல்வராஜ் போட்டியிடுகிறார்.
கிணத்துக்கடவு தொகுதியில் செ தாமோதரன் போட்டியிடுகிறார் காஞ்சிபுரம் தொகுதியில் சோமசுந்தரம் போட்டியிடுகிறார் .மதுராந்தகம் தொகுதியில் மரகதம் குமாரவேல் போட்டியிடுகிறார் இது தனி தொகுதியாகும்.
தாம்பரம் தொகுதியில் சிட்லபாக்கம் ராஜேந்திரன் போட்டியிடுகிறார் கலசப்பாக்கம் தொகுதியில் அக்னி கிருஷ்ணமூர்த்தி போட்டியிடுகிறார் ஆரணி தொகுதியில் சேவூர் ராமச்சந்திரன் போட்டியிடுகிறார் உடுமலை தொகுதியில் உடுமலை ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார் ஓசூர் தொகுதியில் பி பாலகிருஷ்ணா ரெட்டி போட்டியிடுகிறார்.
பவானி தொகுதியில் கே சி கருப்பண்ணன் போட்டியிடுகிறார் சிவகங்கை தொகுதியில் பி ஆர் செந்தில்நாதன் போட்டியிடுகிறார் உத்தரமேரூர் தொகுதியில் வாலாஜாபாத் கணேசன் போட்டியிடுகிறார் ஸ்ரீ பெரும்புதூர் தனி தொகுதியில் மதனந்தபுரம் கே. பழனி போட்டியிடுகிறார்.
சோழிங்கநல்லூர் தொகுதியில் கேபி கந்தன் போட்டியிடுகிறார் சாத்தூர் தொகுதியில் ஆர் கே ரவிச்சந்திரன் போட்டியிடுகிறார் ஆவடி தொகுதியில் எஸ் அப்துல் ரஹீம் போட்டியிடுகிறார் விருதுநகர் தொகுதியில் ஆர் வரதராஜா போட்டியிடுகிறார்.
இதே போல் காட்பாடி தொகுதியில் எஸ் ஆர் கே அப்பு போட்டியிடுகிறார் வாணியம்பாடி தொகுதியில் கோ செந்தில்குமார் போட்டியிடுகிறார் திருப்பத்தூர் தொகுதியில் டாக்டர் திருப்பதி போட்டியிடுகிறார்.
இது தவிர கடையநல்லூர் தொ குதியில் முன்னாள் அமைச்சர் செந்தூர் பாண்டியனின் மகன் சிட்டிங் எம்எல்ஏ குட்டியப்பா என்ற கிருஷ்ண முரளி போட்டியிடுகிறார்.
மேற்கண்ட பட்டியலை வருகிற 24-ஆம் தேதி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிடுகிறார் என்பதை ஜெம் தொலைக்காட்சி முன்னதாக வழங்கும் முதல் கட்ட செய்தியாகும்.
Advertisements





