இந்திய தூதரகங்களை டிஜிட்டல் மயமாக மாற்ற பிரதமர் மோடி வழிகாட்டுதல்.!

நமது தூதரகங்களின் டிஜிட்டல் வருகையை வலுப்படுத்தி, அவற்றை மேலும் தொழில்நுட்பம் சார்ந்ததாகவும், குடிமக்களை மையமாகக் கொண்டதாகவும் மாற்ற வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி தனது சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 2025ஆம் ஆண்டுப் பிரிவைச் சேர்ந்த இந்திய வெளியுறவுச் சேவை பயிற்சி அதிகாரிகளுடன் கலந்துரையாடியதாகத் தெரிவித்துள்ளார். அப்போது, தூதரகப் பணிகளைப் பாரம்பரிய தூதரக எல்லைகளுக்கு அப்பால் கொண்டு சென்று, உள்ளூர் சமூகங்கள் மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர்களுடன் அர்த்தமுள்ள வகையில் இணைய வேண்டும் என்று கூறியதாகத் தெரிவித்துள்ளார்.
புதிய முதலீட்டு வாய்ப்புகளைக் கண்டறிந்து, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கும் ஈடுபாட்டிற்கும் ஊக்கியாக திகழ வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். நமது தூதரகங்களின் டிஜிட்டல் வருகையை வலுப்படுத்தி, அவற்றை மேலும் தொழில்நுட்பம் சார்ந்ததாகவும், குடிமக்களை மையமாகக் கொண்டதாகவும் மாற்ற வேண்டும் என்றும், தூதரகச் சேவைகள் எப்போதும் விரைவாகவும், தடங்கலின்றியும் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், நமது நாகரிகப் பாரம்பரியம், கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத் திறனை உலகிற்கு எடுத்துரைப்பதன் மூலம் இந்தியாவைப் பெருமையுடன் வெளிப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *