தமிழில் வெளியாகும் ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ : படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

Advertisements

பிரேமலு பட இயக்குநர் கிரிஷ் ஏ.டி. இயக்கியுள்ள ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படம் வரும் செப்டம்பர் 4-ம் தேதி தமிழில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

பிரேமலு பட இயக்குனர் கிரிஷ் ஏ.டி. இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தில் நிவின் பாலி கதாநாயகனாகவும், மமிதா பைஜு கதாநாயகியாகவும் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு விஷ்ணு விஜய் இசையமைத்துள்ளார். இப்படம் ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஆகஸ்ட் 21-ம் தேதி வெளியானது.

உலகளவில் 3 நாட்களில் 63 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்நிலையில், பெத்லகேம் குடும்ப யூனிட் திரைப்படம் தமிழில் வெளியாகும் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அதன்படி, வரும் செப்டம்பர் 4-ம் தேதி இப்படம் தமிழில் திரையரங்குகளில் வெளியாகிறது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *