புதிய ஏசி மின்சாரப் பேருந்து சேவைகளைத் தொடங்கி வைத்தார் CM விஜய்.!

சென்னையில் புதிய தாழ்தள குளிர்சாதன மின்சாரப் பேருந்துகளின் சேவையை முதலமைச்சர் விஜய் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்..

சென்னையில் சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைக்கும் வகையில், மாநகரப் போக்குவரத்து கழகத்தின் சார்பில் முதற்கட்டமாக 697 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 625 தாழ்தள மின்சாரப் பேருந்துகள் தண்டையார்பேட்டை, வியாசர்பாடி, பெரும்பாக்கம், பூவிருந்தவல்லி, சென்ட்ரல்  ஆகிய 5 பணிமனைகளில் இருந்து இயக்கப்படவுள்ளன.

இதைத்தொடர்ந்து, இரண்டாம் கட்டமாக 750 புதியத் தாழ்தள குளிர்சாதன மின்சாரப் பேருந்துகள் ஆலந்தூர், சென்ட்ரல், பெரம்பூர், பாடியநல்லூர், ஆவடி, கே.கே.நகர் மற்றும் அய்யப்பன்தாங்கல் ஆகிய 7 பணிமனைகளில் இருந்து இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதில், முதற்கட்டமாக ஆலந்தூர் பணிமனையில் இருந்து 130 புதிய தாழ்தள குளிர்சாதன மின்சாரப் பேருந்துகளின் சேவையை, சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து முதலமைச்சர் விஜய் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்..

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *