ஈரான் மீது கடுமையான நடவடிக்கை : அமெரிக்க நிதி அமைச்சரின் அதிரடி அறிவிப்பு

Advertisements

ஈரானின் கொடுங்கோல் ஆட்சியைத் தாங்கி நிற்கும் ஒவ்வொரு பொருளாதார உயிர்நாடியையும் துண்டிப்பதே தங்கள் இலக்கு என  அமெரிக்க நிதி அமைச்சர் ஸ்காட் பெசென்ட் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் அமெரிக்க நிதி அமைச்சர் ஸ்காட் பெசென்ட் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, ஈரானுக்கு முன்னால் தற்போது இரண்டு பாதைகள் மட்டுமே உள்ளன என்றும் முழுமையான உலகளாவிய தனிமைப்படுத்தல் மற்றும் ஒரு தன்னிறைவுப் பொருளாதாரம், அல்லது உலகப் பொருளாதாரத்தில் மீண்டும் இணைவதற்கான வாய்ப்புடன் இயல்பு நிலைக்குத் திரும்புவது என்றும்  குறிப்பிட்டார்.

ஈரானிய ஆட்சிக்குக் கிடைக்கக்கூடிய மற்ற எல்லா வழிகளையும் முடக்குவதற்காக, இன்று ‘ஆபரேஷன் எகனாமிக் அவுட்கேஸ்’ என்ற நடவடிக்கையைத் தொடங்கியுள்ளதாகத் தெரிவித்தார். ஈரானிய ஆட்சிக்கு நிதியளிக்கும் வருவாயின் ஒவ்வொரு சாத்தியமான மூலமும் தடுக்கப்படும் என்று கூறினார்.

உலகெங்கிலும் உள்ள ஈரானின் நிதித் தொடர்புகளுக்கு எதிராக ஒரு பொருளாதாரத் தாக்குதலைத் தொடங்கியுள்ளதாகவும், இந்த கொடுங்கோல் ஆட்சியைத் தாங்கி நிற்கும் ஒவ்வொரு பொருளாதார உயிர்நாடியையும் துண்டிப்பதே தங்கள் இலக்கு என்று தெரிவித்தார்.

அமெரிக்காவுடனான தங்களது தொடர்புகளை நிறுத்திக்கொள்ளுமாறு உலகத் தலைவர்களிடம் அமெரிக்க அதிபர் டிரம்ப் தொலைபேசி அழைப்புகள் மூலம் கோரிக்கை விடுத்து வருவதாகக் கூறினார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *