America vs Iran War : உலகப் பொருளாதாரத்தில் புதிய நெருக்கடி அபாயம்.!

அமெரிக்கா-ஈரான் இடையேயான அறிவிப்புகள், உலகப் பொருளாதாரத்தில் புதிய நெருக்கடியை ஏற்படுத்தும் அபாயத்தை உருவாக்கியுள்ளன.

ஈரானிடம் இருந்து எண்ணை வாங்கும் நாடுகள் மற்றும் நிறுவனங்கள் மீது அமெரிக்கா கடுமையான அபராதங்கள் விதிக்க நேரிடும் என்று அமெரிக்க வெள்ளை மாளிகை எச்சரித்துள்ளது.
இதுகுறித்து ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்புச் சபையின் செயலாளர் மொஹ்சென் ரெசாய் சமூக வலைத்தளத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.
அதில், அமெரிக்கா தனது பொருளாதாரப் போரைத் தொடர்ந்தால், ஹோர்முஸ் நீரிணை வழியாகவோ அல்லது வளைகுடாவின் வேறு எந்தப் பகுதியில் இருந்தோ ஒரு சொட்டு எண்ணை கூட ஏற்றுமதி செய்யப்படாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், அமெரிக்காவின் இந்த பொருளாதாரப் போருக்கு ஆதரவு தரும் அல்லது பங்கேற்கும் எந்தவொரு நாடும் ஈரான் மீது போர் தொடுப்பதற்குச் சமமாகப் பார்க்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.
இந்நிலையில், ஹோர்முஸ் நீரிணை முடக்கப்பட்டிருப்பதால் உலகளாவிய எரிபொருள் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், அமெரிக்கா-ஈரான் இடையேயான இந்த மோதல் போக்கு, உலகப் பொருளாதாரத்தில் புதிய நெருக்கடியை ஏற்படுத்தும் அபாயத்தை உருவாக்கியுள்ளதாகப் பல்வேறு நாடுகள் கவலை தெரிவித்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *