ரஜினியின் “கூலி” படம் எப்படி இருக்கிறது தெரியுமா? முதல் முழு நீள விமர்சனம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த கூலி படம் எப்படி இருக்கிறது என்பது குறித்த முதல் கட்ட விமர்சனம் வெளியாகி இருக்கிறது . சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் கூலி. இந்த படத்தில் நடிகர்கள் உபேந்திரா அமீர்கான் நாகார்ஜுனா உள்ளிட்ட பலமொழி நட்சத்திர நடிகர்கள் நடித்துள்ளனர் மேலும் சத்யராஜ் சுருதிஹாசன் பகத்பாஸில் ஆகியோருமா இந்த படத்தில் நடித்திருக்கிறார்கள் படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார்
இந்த படத்தில் இடம் பெற்ற மோனிகா பாடல் கடந்த வாரம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்றுள்ளது .வருகிற ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதி படம் வெளியாக உள்ள நிலையில் படத்தின் கதை குறித்த தகவல்கள் பரபரப்பாக பேசப்படுகின்றன . முன்னதாக கை நிறைய தங்க வாட்சுகளுடன் ரஜினிகாந்த் வில்லத்தனமாக சிரிப்பது போல் தோன்றிய போஸ்டர் வெளியானது
ஒரு பாடலில் அனிருத் கையில் தங்க வாட்சுகள் இருக்கும் காட்சிகளும் இடம் பெற்றுள்ளது .இந்த தங்க வாட்சுகளுக்குப் பின்னால்தான் படத்தில் மையக் கதை இருக்கிறது . படத்தில் ரஜினிகாந்த் தேவா என்கிற கேங்ஸ்டராக நடித்திருக்கிறார். வின்டேஜ் எனப்படும் தங்க வாட்சுகளில் ஒரு வித டெக்னாலஜி மறைத்து வைக்கப்பட்டிருக்கிறது
அந்த டெக்னாலஜியை பயன்படுத்தி கடத்தல் தொழில் செய்யும் தேவா அதாவது ரஜினிகாந்த் தனது பழைய மாபியா கூட்டத்தை மீண்டும் கொண்டுவர முயற்சி செய்கிறார் . அந்த டெக்னாலஜி மூலம் புதிய கேங்ஸ்டர் கூட்டத்தை உருவாக்கும் போது அந்த டெக்னாலஜி வேறு விதமான விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதை கண்டுபிடிக்கிறார்
இதன்பிறகு இடைவேளை வருகிறது இடைவேளைக்குப் பிறகு ரஜினிகாந்த் முழுக்க முழுக்க அடிதடி காட்சிகளிலில் பட்டையை கிளப்பி இருக்கிறார் ஆக்சன் காட்சிகள் அனைத்தும் மிக அதிரடியாகவே அமைந்திருக்கிறது என்கிறார்கள் இடைவேளைக்குப் பிறகு  ரஜினிகாந்த் இந்த உலகத்தில் பேராசை தான் தவறான வழியை காட்டுகிறது குற்றங்களுக்கு காரணம் பேராசை தான் என்கிற ரீதியில் மனம் திருந்தி புதிய வாழ்க்கைக்கு செல்கிறார் இதுதான் மைய கதையாகும்
தங்க வாட்சுகளில் மறைக்கப்பட்டிருக்கும் ரகசிய டெக்னாலஜி என்ன? என்பதுதான் படத்தின் விறுவிறுப்புக்கு முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது என்கிறார்கள் . படத்தில் பிரபல இந்தி நடிகர் அமீர்கான் தாஹா என்ற வேடத்தில் சுவாரசியமான வில்லனாக நடித்திருக்கிறார் சுமார் 15 நிமிடங்கள் வரை படத்தில் தோன்றியிருக்கும் அவர் அனைவரையும் மிகவும் ரசிக்க வைக்கிறார்
படத்தில் முக்கிய வில்லனாக பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா நடித்துள்ளார் ரஜினிக்கு மெயின் வில்லன் இவர்தான். சைமன் என்ற கதாபாத்திரத்தில் படம் முழுக்கவே வருகிறார் நாகார்ஜுனா இந்த படத்திற்காக அவர் 35 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியதாக சொல்லப்படுகிறது.  படத்தில் சத்யராஜின் மகளாக சுருதிஹாசன் வருகிறார் ப்ரீத்தி என்ற கேரக்டரில் நடித்திருக்கும் அவர் முதல்முறையாக இந்த படத்தில் சண்டை காட்சிகள் செய்திருக்கிறார். அவரது ஆக்சன் காட்சிகள் பரபரக்காதிக்கின்றன
கூலி படத்தில் வரும் சிகிட்டு பாடல் மிகவும் ஜனா ரஞ்சகமாக அமைந்திருக்கிறது இந்த பாடல் டி ராஜேந்தர் எழுதி அவரும் ஆடிப்பாடி இருக்கிறார் கூடவே அனிருத்தம் ஆடிப் பாடுகிறார் இந்த பாடல் திரையரங்கை அதிரவைக்கும்படியாக காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன
 நடிகர் சத்யராஜ் ராஜசேகர் என்கிற பெயரில் ரஜினிகாந்தின் நண்பராக நடித்திருக்கிறார் அவரது நடிப்பு வழக்கம்போல அனைவரையும் ரசிக்க வைக்க முடியாத அமைந்திருக்கிறது . கூலி திரைப்படத்தை பார்த்த ரஜினிகாந்த் இயக்குனர் லோகேஷ் கனகராஜை கட்டிப்பிடித்து எனக்கு இன்னொரு தளபதி படத்தை கொடுத்திருக்கிறீர்கள் என்று கூறி இருக்கிறார் இதுதான் படத்தின் முதல் விமர்சனமாக பார்க்கப்படுகிறது
இந்த திரைப்படம் உருவாகும் காலகட்டத்தில் லோகேஷ் கனகராஜ் பெரும்பாலான நாட்கள் குளிக்கவில்லை தூங்கவில்லை என்கிறார்கள் படப்பிடிப்பு குழுவினர்கள்.  இது குறித்து லோகேஷ் கனகராஜ் கூறும் பொழுது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்தை பார்த்துவிட்டு எனக்கு இன்னொரு தளபதி படத்தை கொடுத்திருக்கிறீர்கள் என்று பாராட்டிய பிறகு தான் நிம்மதியாக தூங்கினேன் என்று குறிப்பிட்டிருக்கிறார்
இந்த படத்திற்கு லோகேஷ் கனகராஜ் 60 கோடி ரூபாய் சம்பளம் வாங்கி இருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 260 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியதாக சொல்லப்படுகிறது படத்தின் மொத்த பட்ஜெட் 450 கோடி ரூபாய் என்கிறார்கள் . கூலி திரைப்படம் ஆயிரம் கோடி ரூபாய் வசூலிக்கும் என கணிக்கப்பட்டுள்ள நிலையில் கூலி திரைப்படத்தை காண ரசிகர்கள் மிகுந்த ஆர்வமாக காணப்படுகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *