
தமிழக அரசியலில் தற்பொழுது விறுவிறுப்புகளுக்கு பஞ்சமில்லை என்று தான் சொல்லணும்.. அந்த வகையில் தமிழக வெற்றி கழகத்திற்கு வெளியிலிருந்து ஆதரவு தரோம்னு சொன்ன கம்யூனிஸ்ட் கட்சிகள் தற்பொழுது தவெக – விற்கு போர் கோடி தூக்க ஆரம்பித்து விட்டார்கள்.. ஆரம்பத்துல தவெக ஆட்சிக்கு வர்றதுக்கு இடதுசாரிகள் ரொம்பவே உறுதுணையா இருந்தாங்க. ஆனா, இப்போ போற போக்கைப் பார்த்தா, ‘நம்ம கைலயே சூடு போட்டுக்கிட்டோமோ’ங்கிற மாதிரி கம்யூனிஸ்ட் தலைவர்கள் ஓப்பனாவே கேள்வி கேட்க ஆரம்பிச்சிட்டாங்க. குறிப்பா, திண்டுக்கல் விவகாரம் தொடங்கி அடுத்தடுத்து நடந்த சில விஷயங்கள் இடதுசாரிகளை டென்ஷன் ஆக்கி இருக்கு.
இந்த நேரத்துல, வரப்போற இடைத்தேர்தலில் தவெகவுக்கு நம்ம கம்யூனிஸ்ட் கட்சிகள் சப்போர்ட் பண்ணுவாங்களா? மாட்டாங்களா? அப்படிங்கிற கேள்விக்கு, சிபிஐ மாநில செயலாளர் மு. வீரபாண்டியன் ரொம்ப முக்கியமான ஒரு பதிலைச் சொல்லியிருக்காரு. அது என்னங்கிறதை இந்த வீடியோல முழுமையா பார்க்கலாம்..! தமிழ்நாட்டுல தற்போதைய அரசியல் நிலவரப்படி, சில தொகுதிகள் காலியாகியிருக்கிறதால எப்போ வேணாலும் இடைத்தேர்தல் வரலாம்னு எதிர்பார்க்கப்படுது. இந்த நேரத்துல, தவெக அரசுக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் இடையில ஒரு உரசல் போயிட்டு இருக்கு.
அதுக்கு மெயின் ரீசன் என்ன தெரியுமா?
ஒன்னு, திண்டுக்கல் குஜிலியம்பாறை வட்டாட்சியர் அலுவலகத்துல இருந்து, கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களின் விபரங்களை சேகரிக்கச் சொல்லி ஒரு சுற்றறிக்கை வந்துச்சு பாருங்க… அதுதான் முதல் தீப்பொறி! ரெண்டாவது, மாணவர்களின் போராட்டங்களை ஒடுக்குறது சம்பந்தமா வந்த சில அறிவிப்புகள்..
இந்த ரெண்டு விஷயமுமே இடதுசாரிகளை நேரடியாவே குறிவைக்கிற மாதிரி இருக்குன்னு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பகிரங்கமாகவே கொதிச்சது. மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பெ. சண்முகம் கூட ரொம்ப வெளிப்படையா, ‘இந்த அரசுக்கு அதிகாரிகள் வேண்டுமா? அல்லது ஆட்சி அமைக்க உதவிய கம்யூனிஸ்ட் கட்சிகள் வேண்டுமா?’ அப்படின்னு ஒரு அதிரடியான கேள்வியை முன் வச்சிருந்தார்.
இதனால, ‘அப்பாடா, தவெக அரசுக்கு கொடுத்த சப்போர்ட்டை கம்யூனிஸ்ட் கட்சிகள் வாபஸ் வாங்கப் போறாங்கப்பா’ அப்படின்னு அரசியல் வட்டாரத்துல பரபரப்பு பற்றிக்கொள்ள ஆரம்பிச்சிடுச்சு.”
“இந்த மாதிரி ஒரு அனல் பறக்குற சூழல்லதான், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு. வீரபாண்டியன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போ அவரிடம் பத்திரிகையாளர்கள் நேரிடையாகவே ஒரு கேள்வியை வச்சாங்க:
‘வரும் இடைத்தேர்தலில் தவெகவுக்கு உங்களது ஆதரவு தொடருமா? இல்லையா?’
அதுக்கு வீரபாண்டியன் என்ன சொன்னார் தெரியுமா? ரொம்பவே கவனமாக, ‘கட்சித் தலைமைதான் இதுகுறித்து முடிவெடுக்கும்’ அப்படின்னு சுருக்கமா முடிச்சிட்டாரு.
தவெகவுக்கு ஆதரவா அல்லது எதிராவோ அவர் எதையுமே வெளிப்படையா பேசல. ஒருவேளை அரசு மீது கோபத்தில் இருந்தாலும், அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்க வேண்டாம்னு கம்யூனிஸ்ட் மேலிடம் நினைக்கிறதா இது காட்டுது. ஆனாலும், அவர் சொன்ன இந்த வார்த்தை இப்போ அரசியல் களத்துல ஒரு பெரிய விவாதத்தையே கிளப்பியிருக்கு.”
“இப்போ வரப்போற இடைத்தேர்தல் வெறும் சாதாரண தேர்தல் கிடையாதுங்க. ஆளுங்கட்சியான தவெக, பிரதான எதிர்க்கட்சியான திமுக, மற்றும் இந்த முறை கொஞ்சம் பின் தள்ளப்பட்ட அதிமுகன்னு மூணு கட்சிகளுமே இந்த தேர்தலை ரொம்பவே சீரியஸா பார்க்குறாங்க.
எப்படியாவது இந்த தொகுதிகள்ல ஜெயித்தே ஆகணும்னு மூணு தரப்பும் செமத்தியா வியூகம் வகுத்துட்டு வராங்க. இந்தச் சூழல்ல, கம்யூனிஸ்ட் கட்சிகளின் மௌனமும், வீரபாண்டியனின் இந்த பதிலும் தவெக தரப்புக்கு ஒரு சின்ன யோசனையை ஏற்படுத்தியிருக்குன்னே சொல்லலாம்.”
இறுதியாக, கம்யூனிஸ்ட் கட்சிகள் தவெக மீது வச்சிருக்கும் இந்த அதிருப்தி தேர்தலில் எதிரொலிக்குமா? இல்லை வழக்கம் போல கூட்டணிக்குள் எல்லாம் சரியாகிடுமா? நீங்க என்ன நினைக்கிறீங்க? உங்கள் கருத்துக்களை கீழே உள்ள கமெண்ட் பாக்ஸில் மறக்காம பதிவு பண்ணுங்க.



