TNPL20 2026 : இரண்டாவது தகுதிச்சுற்றுக்கு முன்னேறியது கோவை அணி.!

 டி.என்.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் தகுதிச் சுற்றுக்கான போட்டி மழையால் ரத்து செய்யப்பட்ட நிலையில், கோவை அணி இரண்டாவது தகுதிச்சுற்றுப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் டி.என்.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் தகுதிச் சுற்றுப் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் கோவை கிங்ஸ் மற்றும் திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதின.
இதில் டாஸ் வென்ற கோவை அணி பந்துவீச்சு தேர்வு செய்தது. எனினும், மழையால் போட்டி தடைப்பட்டது. இதைத்தொடர்ந்து போட்டி மீண்டும் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தொடர் மழையால் போட்டி கைவிடப்பட்டது.
இதையடுத்து, தொடர் சுற்றுப் போட்டிகளில் பெற்ற புள்ளிகள் பட்டியல் அடிப்படையில் கோவை அணி, இரண்டாவது தகுதிச்சுற்றுப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *