நயினார் நாகேந்திரன் போட்டியிடுவது எந்த தொகுதி தெரியுமா..?

சட்டமன்றத் தேர்தலில் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தொகுதியில் தான் போட்டியிட உள்ளதாகத் தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23ஆம் நாள் நடைபெற உள்ளது.

இந்தத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி, திமுக – காங்கிரஸ் கூட்டணி, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழகம் ஆகிய நால்முனைப் போட்டி நிலவுகிறது.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜகவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. நயினார் நாகேந்திரன் சட்டமன்ற உறுப்பினராக உள்ள திருநெல்வேலித் தொகுதி இம்முறை அதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. பாஜக வேட்பாளர் பட்டியல் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில் கன்னியாகுமரியில் செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன், தான் இந்த முறை சாத்தூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடப்போவதாகத் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *