தமிழ் மாநிலக் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல்.! யார் யார் எங்கெங்கு போட்டி தெரியுமா..?

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமிழ் மாநிலக் காங்கிரஸ் போட்டியிடும் ஐந்து தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23ஆம் நாள் நடைபெற உள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமிழ்மாநிலக் காங்கிரசுக்கு ஐந்து தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்த ஐந்து தொகுதிகளிலும் தமாகா வேட்பாளர்கள் தாமரைச் சின்னத்தில் போட்டியிடுவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தங்கள் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்களை வெளியிட்டார்.

அதன்படி ஈரோடு மேற்குத் தொகுதியில் யுவராஜா, ஒட்டன்சத்திரம் தொகுதியில் விடியல் சேகர், கிள்ளியூரில் நிவின் சைமன், கும்பகோணத்தில் அசோக்குமார், இராணிப்பேட்டையில் கார்த்திகேயன் ஆகியோர் தமாகா வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோல் சட்டமன்றத் தேர்தலுக்கான தமிழ் மாநிலக் காங்கிரஸ் தேர்தல் அறிவிக்கையையும் ஜி.கே.வாசன் வெளியிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *