Advertisements

Video :👇👇
பொது வாழ்வுக்காக திருமணம் செய்யாத இல. கணேசன்.
தமிழ்நாட்டின் மூத்த அரசியல்வாதியும் நாகலாந்து மாநிலத்தின் தற்போதைய ஆளுநராகவும் இருந்த இல கணேசன் உடல்நல குறைவால் இந்த மண்ணுலகை விட்டு மறைந்திருக்கிறார்.பொது வாழ்க்கைக்காக திருமணமே செய்து கொள்ளாத அவரது வாழ்க்கை பல வித தியாகங்களைக் கொண்டது.
1945 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 16ஆம் தேதி பிறந்தவர் இல கணேசன். கடந்த பிப்ரவரி மாதத்துடன் அவருக்கு 80 வயது முடிந்து தற்பொழுது 81 வது வயதில் அடி எடுத்து வைத்திருந்தார்.இவரது தந்தை இலக்குமி ராகவன் தாயார் அலமேலு. சொந்த ஊர் தஞ்சாவூர். சிறுவயதிலேயே தனது தந்தையை இழந்த இல கணேசன், அண்ணன் கோபாலன் அரவணைப்பில் வளர்ந்தார். ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் ஈடுபாடு கொண்ட இல கணேசன் முழு நேர வேலையாக பொதுவாழ்வில் ஈடுபட்டு வந்தார். இவரது குடும்பம் தெலுங்கு பிராமண வகுப்பைச் சேர்ந்தது.
ஆர் எஸ் எஸ் அமைப்பில் பணியாற்றி வந்த இல கணேசன், 1991 ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் ஆனார் 2009 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலிலும் 2014 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலிலும் தென் சென்னை தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளராக போட்டியிட்டு தோல்வி அடைந்தார் பின்னர் மத்திய பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார் .கடந்த 2016 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஆறாம் தேதி மாநிலங்களவை உறுப்பினராக பதவி ஏற்று கொண்டார். இதனை தொடர்ந்து கடந்த 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22ஆம் தேதி இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களால் மணிப்பூர் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். மணிப்பூர் மாநிலத்தின் 17 வது ஆளுநராக இல கணேசன் பொறுப்பேற்றுக் கொண்டார்.

இதனைத் தொடர்ந்து கடந்த 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இருபதாம் தேதி இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முன்பு அவர்களால் நாகலாந்து மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். நாகலாந்து மாநிலத்தின் 19 ஆவது ஆளுநராக இல கணேசன் பொறுப்பேற்று பணியாற்றி வந்தார் .இது மட்டுமல்லாமல் முன்னதாக கடந்த 2022 ஆம் ஆண்டில் மேற்கு வங்காளத்தின் கூடுதல் பொறுப்பு ஆளுநராகவும் பணியாற்றி வந்தார்.
இல.கணேசன் ஆர் எஸ் எஸ் இயக்கத்தில் இருந்த போது அதன் பிரச்சார ஊழியராக பணியாற்றினார் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி ஆட்சி காலத்தில் அவசர நிலை அறிவித்தபோது காவல்துறையினர் இவரை தேடினார்கள். அந்த காலகட்டத்தில் சுமார் ஒரு வருடம் தலைமறைவாக வாழ்ந்தார் இலகணேசன் .இதன் பின்னர் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து பணியாற்ற தொடங்கினார்.
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் மட்டுமல்லாமல் தேசிய செயலாளர் தேசிய துணை தலைவர் உள்ளிட்ட பொறுப்புகளையும் வகித்து வந்தவர் இல கணேசன் .பாரதிய ஜனதா கட்சியில் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்து வந்த இல கணேசன் அனைத்து அரசியல் கட்சி தலைவர்களாலும் பாராட்டப்பட்டவர் .
தனது அரசியல் வாழ்க்கையில் கறை படாத சொந்தக்காரர். யாரையும் தாக்கி பேசாத அரசியல்வாதி. கருத்தாழமிக்க பேச்சாளர். ஆடம்பரத்திற்கு ஆசைப்படாதவர் என பன்முக த்தன்மை கொண்டவர் இல கணேசன் . இவருக்கு நீண்ட காலமாகவே நீரிழிவு நோயின் தாக்கம் இருந்தது. சமீபத்தில் இவர் சென்னை வந்திருந்தார் தி.நகரில் உள்ள வெங்கட் நாராயணா சாலையில் இவரது வீடு இருக்கிறது இவரது வீட்டில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தபோது கடந்த எட்டாம் தேதி அதிகாலை 3 மணி அளவில் திடீரென கால் மரத்து போய் மயக்கம் அடைந்து கீழே விழுந்தார்
இதனால் அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது இதனை தொடர்ந்து சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் மருத்துவ பரிசோதனையில் அவரது தலையில் ரத்த உறைவுஇருப்பது தெரியவந்தது இதனைத் தொடர்ந்து அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலன் இல்லாமல் இன்று மாலை மரணம் அடைந்தார்
இல கணேசனை வளர்த்து ஆளாக்கிய இவரது சகோதரர் இல.கோபாலன் கடந்த ஜனவரி மாதம் தான் காலமானார் . அவரும் இதே வீட்டில் தான் வசித்து வந்தார்.
இல.கோபாலன் உடலுக்கு முதல்வர் மு க ஸ்டாலின் கூட நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது
Advertisements



