முதல்வர் மு.க ஸ்டாலின் தொகுதியில் வாக்கு திருட்டு: பரபரப்பை கிளப்பிய பாஜக !

Advertisements
முதல்வர் மு.க.ஸ்டாலின் போட்டியிட்ட கொளத்தூர் தொகுதியில் வாக்கு திருட்டு நடைபெற்றுள்ளதாகப் பரபரப்பு தகவல் வெளிவந்துள்ளது.
கடந்த ஒரு மாத காலமாக இந்தியா முழுவதும் வாக்குத்திருட்டு விவகாரம் பூதாகரமாக வெடித்து வந்த நிலையில் நாளுக்கு நாள் புதிய புதிய அதிர்வலைகள் ஏற்பட்டு வருகின்றன. மகாராஷ்டிரா மாநிலம் மகா தேவபுரா தொகுதியில் சுமார் ஒரு கோடி வாக்காளர்கள் போலியாகச் சேர்க்கப்பட்டு பாஜக வெற்றி பெற்றுள்ளது என ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். இதனைத் தொடர்ந்து புதுடெல்லியில் இதே போல் வாக்கு திருட்டு நடந்து அரவிந்த் கெஜ்ரிவால் தோற்கடிக்கப்பட்டார் பாஜக வெற்றி பெற்றது என்ற குற்றச்சாட்டும்எழுந்தது
பாரதிய ஜனதா கட்சிமீது இது போன்று ஏராளமான குற்றச்சாட்டுகள் கூறிய நிலையில் பதிலடியாகக் காங்கிரஸ் மீது பாஜகவும் குற்றம் சாட்டியது. இந்திய குடியுரிமை பெறுவதற்கு முன்பாகவே அகில இந்திய காங் கிரஸ் தலைவர் சோனியா காந்தி இரண்டு முறை தேர்தல்களில் வாக்களித்திருக்கிறார் என்று குற்றச்சாட்டப்பட்டது. ஆனால் இந்தக் குற்றச்சாட்டு அனைத்தையும் தேர்தல் கமிஷன் மறுத்து வருகிறது. இருந்த போதிலும் பல மாநிலங்களில் கள ஆய்வுகள் நடத்தியபோது வாக்கு திருட்டு அதிசயங்கள் நிறையவே நடைபெற்றுள்ளன. மகா தேவபுரா தொகுதியில் ஒரே வீட்டில் என்பது வாக்காளர்கள் இருந்ததாகச் சொல்லப்பட்ட வீட்டில் ஒருவர்தான் குடி இருக்கிறார் அந்த வீட்டின் அளவு 10 க்கு 15 அடி ஆகும்
பிரதமர் நரேந்திர மோடி வெற்றி பெற்ற வாரணாசி தொகுதியில் 57 வயதான ராஜ்கமல் என்பவருக்கு 72 வயதில் மகன் இருப்பதாக வாக்காளர் பட்டியலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது மட்டுமல்ல ராஜ் கமலுக்கு 60 குழந்தைகள் இருப்பதாகவும் அதில் கடைசி குழந்தைக்கு 28 வயது இருப்பதாகவும் மூத்த குழந்தைக்கு 72 வயது இருப்பதாகவும் வாக்கு பதிவாகி இருக்கிறது இவர்கள் எல்லோரும் ஒரே வீட்டில் இருப்பதாகவும் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்று இருக்கிறது.
நாடு முழுவதும் இது போன்று வாக்கு திருட்டு அலை வீசிய நிலையில் திமுக அறிவாலயத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் கூட்டப்பட்டு வாக்குத்திருட்டு தொடர்பாகக் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன.இந்த நிலையில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட மு க ஸ்டாலின் வாக்கு திருட்டு மூலமாகத்தான் வெற்றி பெற்றார் என்ற புதிய குற்றச்சாட்டு கிளம்பி இருக்கிறது.
திமுக தலைவர் மு.க ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் மூன்று முறை போட்டியிட்டு மூன்று முறையும் வெற்றி பெற்று இருக்கிறார்.1984 ஆம் ஆண்டு முதல் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்ட அவர் கடந்த 2011 ஆம் ஆண்டு தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டார் அந்தத் தேர்தலில் அவர் 68 ஆயிரத்து 784 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட சைதை துரைசாமி 65 ஆயிரத்து 965 வாக்குகள் பெற்றார் அதாவது சுமார் 2 ஆயிரத்து 749 வாக்குகள் வித்தியாசத்தில் மு க ஸ்டாலின் வெற்றி பெற்றார். இதே கொளத்தூர் தொகுதியில் கடந்த 2016 ஆம் ஆண்டு தேர்தலில் மு க ஸ்டாலின் 91 ஆயிரத்து 303 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். கடந்த 2021 ஆம் ஆண்டு தேர்தலில் இதே கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட மு க ஸ்டாலின் ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 462 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்
இந்த நிலையில் கடந்த தேர்தலின்போது கொளத்தூர் தொகுதியில் வாக்குத்திருட்டு நடைபெற்றுள்ளதாகப் பாரதிய ஜனதா கட்சி சார்பில் குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது. கொளத்தூர் தொகுதியில் 20 ஆயிரத்துக்கும் மேலான வாக்காளர்கள் போலி வாக்காளர்கள் இவர்கள் அனைவரும் போலி முகவரிகள் போலி பெயர்களில் சேர்க்கப்பட்டவர்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுராக் தாகூர் இந்தக் குற்றச்சாட்டைத் தெரிவித்துள்ளார் இதற்கு ஆதாரம் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார் இது மட்டுமல்ல ராகுல் காந்தி போட்டியிட்ட கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் 93 ஆயிரத்து 499 வாக்குகள் திருடப்பட்டு உள்ளன இதில் 20 ஆயிரத்து 438 பேர் போலி நபர்கள் 17 480 பேர் போலி முகவரியில் வாக்கு போட்டு உள்ளார்கள். இதேபோல் பிரியங்கா காந்தி போட்டியிட்ட ரேபரேலி தொகுதியில் 19ஆயிரத்து 512 வாக்கு திருட்டுகள் நடைபெற்றுள்ளன எனக் குற்றம் சாட்டியுள்ளார்
பாரதி ஜனதா கட்சி சார்பில் இது போன்ற தரவுகள் ஆய்வு செய்யப்பட்டு உண்மை தகவலை வெளியிடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். வடமாநிலங்களில் அலை வீசிய வாக்குத்திருட்டு விவகாரம் தற்பொழுது தமிழ்நாட்டு அரசியலிலும் தலையிட்டிருப்பது புதிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *