
இந்தியாவுக்கும் மோடி கேரன்டி-இந்த தொகுதிக்கு நான் கேரன்டி. இந்த முறை தாமரை சின்னத்தில் வாக்களியுங்கள் தாமரை மலர்ந்தால் திருவண்ணாமலை மலரும் எனப் பாஜக வேட்பாளர் அஸ்வத்தாமன் கூறினார்.
திருவண்ணாமலை பாராளுமன்ற பாஜக வேட்பாளர் அஸ்வத்தாமன் கீழ்பெண்ணாத்தூர் தொகுதிக்கு உட்பட்ட பசுங்கரை, வேளானந்தல், பெருங்குளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது உரையாற்றிய பாஜக வேட்பாளர் அஸ்வத்தாமன் அவர்கள் தகுதி பார்த்து வாக்களியுங்கள் எனப் பொது படித்துறை அமைச்சர் வேலு உரையாற்றி வருகிறார் என்றும், அப்படி தகுதி பார்த்து இருந்தால் மு. க. ஸ்டாலின் முதல்வராக ஆகியிருக்க முடியுமா என்றும்,, உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக இருக்க முடியுமா என்றும், வேலு அவர்கள் அமைச்சராக இருக்க முடியுமா எனக் கேள்வி எழுப்பினார்.
கொள்ளையடிப்பவர்களுக்கு நாம் ஓட்டளித்துக் கொண்டிருந்தால் நம்முடைய தலைமுறை எப்படி வளரும் என்றும் எப்போது வளரும் என்றும், வாக்காளர்களாகிய நமக்கு அரசியல் விழிப்புணர்வு வர வேண்டும் என்றும் நமது நாடு முன்னேற வேண்டும், நமது மக்கள் முன்னேற வேண்டும், நமது இளைஞர் சமுதாயம் முன்னேற வேண்டும், நம்முடைய அடுத்த தலைமுறை முன்னேற வேண்டும் என்றால் நம் அனைவரும் தாமரை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்றும் உரையாற்றினார்.
மேலும் வருகின்ற தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் பாஜக தான் ஆட்சி அமைக்கும் என்றும் வருகின்ற தேர்தல் பிரதமரக்கான தேர்தல் என்றும் ஆகவே நமது தொகுதி வளர்ச்சி அடைய வேண்டுமென்றால் நமது வாக்கை வீணாக்காமல் தமிழ் சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும் என்றும் வாக்கு சேகரித்தார்.

