
1916ம் ஆண்டில் இருந்து தயாரிக்கப்பட்டு வரும் சோப்பு மைசூர் சாண்டல் சோப்பு. மைசூர் மன்னர் கிருஷ்ணராஜ வடியார் 90களில் பெங்களூரில் நிர்வகித்த அரசு சோப்பு நிறுவனம் தான் மைசூர் சாண்டல் சோப்பை தயாரித்து வருகிறது. கர்நாடக அரசுக்கு சொந்தமான கர்நாடாக சோப்ஸ் அன்ட் டிடர்ஜன்ட்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் மைசூர் சாண்டல் சோப்பின் விளபர தூதுவராக நியமிக்கப்பட்டிருக்கிறார் தமன்னா.
உலக அளவில் மைசூர் சோப் விற்பனையை அதிகரிக்கவே தமன்னாவை நியமித்ததாக அமைச்சர் எம்.பி.பாட்டீல் தெரிவித்துள்ளார். கர்நாடக சோப் டிடர்ஜென்ட்ஸ் நிறுவனம் தங்களின் விளம்பரத் தூதராக நடிகை தமன்னாவை நியமித்துள்ளது. கர்நாடகத்தைச் சேர்ந்த நடிகைகள் இருக்கும்போது கன்னடம் தெரியாத தமன்னாவை ஏன் நியமிக்க வேண்டும் என்று பலரும் விமர்சித்தனர்.
இதற்குப் பதிலளித்துள்ள அமைச்சர் பாட்டீல், தீபிகா பதுக்கோன், ரஷ்மிகா மந்தணா, பூஜா ஹெக்டே, கியாரா அத்வானி ஆகியோரையும் விளம்பரத் தூதராக நியமிக்கப் பரிசீலித்ததாகவும், அவர்களை விடச் செலவு குறைந்த அதே நேரத்தில் சமூக வலைத்தளத்தில் 2 கோடியே 80 இலட்சம் பின்பற்றாளர்களைக் கொண்டிருக்கிற தமன்னாவே சிறந்தவர் என்று முடிவு செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.
மைசூர் சாண்டல் சோப்பின் மொத்த விற்பனையில் 82 விழுக்காடு பிற மாநிலங்களின் பங்காகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.


