ரவி மோகன், ஆர்த்தி அறிக்கை வெளியிட தடை.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

தமிழ் சினிமாவில் விவாகரத்துகள் அதிகமாகி கொண்டே வருகிறது . அந்த வகையில் கடந்த சில நாட்களாக ரவி மோகன், ஆர்த்தி இருவரும் மாறி மாறி அறிக்கை வெளியிட்டு வருவது பரபரப்பை கிளப்பி வருகிறது. சமீப காலமாக சோஷியல் மீடியாவில் இவர்களின் அறிக்கை தொடர்பான விவாதங்களே நடந்து வருகின்றன. இருவரும் ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகள் சுமத்தி அறிக்கை வெளியிட்டு கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் ரவி மோகன், ஆர்த்தி இருவரும் அறிக்கை வெளியிடுவது தொடர்பாக நீதிமன்றம் புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. ரவி மோகன், ஆர்த்தி இருவருக்கும் இடையிலான விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதனிடையில் ரவி மோகன் மீது குற்றச்சாட்டுகளை சுமத்தி ஆர்த்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதற்கு பதிலளித்து ரவி மோகன் ஒரு அறிக்கையை வெளியிட, தொடர்ந்து ஆர்த்தியின் தாயாரும் அறிக்கை வெளியிட்டார்.

இப்படி சமீப காலமாக ரவி மோகன் மற்றும் ஆர்த்தி அறிக்கைகள் சோஷியல் மீடியாவில் ஹாட் டாபிக்காக பேசப்பட்டு வரும் நிலையில், தற்போது இருவரும் அறிக்கை வெளியிட நீதிமன்றம் தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. அதாவது ரவி மோகன், தனக்கு எதிராக அவதூறு கருத்துகளை தெரிவிக்க ஆர்த்தி மற்றும் அவரது தாயாருக்கு தடை விதிக்க வேண்டும் என மனுதாக்கல் செய்திருந்தார்.இந்நிலையில் ரவி மோகன் மற்றும் ஆர்த்திக்கு பொதுவெளியில் அவதூறு கருத்துக்கள் தெரிவிப்பதை தவிர்க்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *