Mallikarjun Kharge:அரசைக் காப்பாற்றும் நோக்கில் பட்ஜெட் தயாரிப்பு!

Advertisements

விவசாயம், சுகாதாரம், கல்வி உள்ளிட்டவற்றிற்கு குறைந்த அளவிலேயே நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகக் காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார்.

புதுடெல்லி:2024- 25ம் நிதி ஆண்டிற்கான மத்திய பொது பட்ஜெட்டை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியதாவது:-

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகளை அப்படியே காப்பி அடித்துள்ளனர். சாமானிய இந்தியருக்கு எந்த நிவாரணும் இல்லாமல் கூட்டளிகளுக்கு நன்மை பயக்கும் பட்ஜெட்டாகவே உள்ளது. நாட்டின் முன்னேற்றத்திற்காக மத்திய பட்ஜெட்டை பா.ஜனதா அரசு தயாரிக்கவில்லை. தனது அரசைக் காப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் மத்திய பட்ஜெட்டை தயாரித்துள்ளனர்.

10 ஆண்டுகள் தொடர் போராட்டத்திற்கு பிறகு வேலைவாய்ப்புகுறித்து அறிவிப்பு வெளிவந்துள்ளது. மத்திய பட்ஜெட்டில் பெண்களுக்கான பொருளாதார திறனை மேம்படுத்த எந்தச் சிறப்புத்திட்டமும் இல்லை.பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினருக்கு எந்தத் திட்டமும் இல்லை. ரெயில்வே குறித்து மத்திய பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் கூறப்படவில்லை. விவசாயம், சுகாதாரம், கல்வி உள்ளிட்டவற்றிற்கு குறைந்த அளவிலேயே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *