Advertisements

10 தொகுதிகளில் போட்டியிட வாய்ப்பளித்தால் தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி அமைக்கப்படும் என தமிழ்நாடு முத்தரையர் சங்கத்தின் மாநிலத் தலைவர் அம்பலத்தரசு தெரிவித்துள்ளார்.
திருச்சியில் தமிழ்நாடு முத்தரையர் சங்கத்தின் மாநிலத் தலைவர் அம்பலத்தரசு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, கல்வி ,வேலைவாய்ப்பில் தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும், 29 உட்பிரிவுகளை இணைத்து முத்தரையர் என்று சாதி சான்றிதழ் வழங்கி ஒரே பட்டியலில் இணைத்திட வேண்டும், சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட 15 தொகுதிகளில் முத்தரையர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை ஏற்கனவே தமிழக முதலமைச்சரை சந்தித்து வழங்கியுள்ளதாகத் தெரிவித்தார்.
10 தொகுதிகளில் போட்டியிட வாய்ப்பளித்தால் தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி அமைக்கப்படும் என்று கூறினார். இப்பேட்டியின் போது, மாநில துணைத் தலைவர் மனோகரன், மாநில இளைஞரணி செயலாளர் ராஜலிங்கம், மாவட்ட செயலாளர்கள் ராமச்சந்திரன் ,மற்றும் பலர் உடன் இருந்தனர்.
Advertisements


