
இந்தியா வருகை தந்துள்ள அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ், டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். டெல்லியில் பிரதமர் மோடியின் இல்லத்தில் நடைபெற்ற இச்சந்திப்பில் இருதரப்பு உறவுகள் தொடர்பாக முக்கிய பேச்சுவார்த்தை நடைபெற்றது.தற்போது 4 நாட்கள் பயணமாக ஜேடி வான்ஸ் தமது குடும்பத்தினருடன் இந்தியா வருகை தந்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் ஜேடி வான்ஸ், குடும்பத்தினருடன் சந்தித்தார். இந்த சந்திப்பின் போது இரு தலைவர்களும், இருதரப்பு உறவு குறித்து முக்கியப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. பின்னர், வான்ஸ் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரவு விருந்து அளித்தார்.
அமெரிக்காவும் இந்தியாவும் நட்பு நாடுகளாக வர்த்தக உறவை மேம்படுத்தி வருகின்றன. இருநாடுகளிடையே கடந்த ஆண்டு 129.2 பில்லியன் டாலர் வர்த்தகம் நடைபெற்றது. இந்தியாவிடம் இருந்து 87.4 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களை அமெரிக்கா இறக்குமதி செய்தது. இது முந்தைய ஆண்டுகளைவிட அதிகம்.
இந்திய பொருட்களுக்கு 26% வரி தொடர்பாக ஏற்கனவே பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. அமெரிக்க துணை அதிபர் ஜோடி வான்ஸின் இந்திய பயணத்தின் போதும் இது தொடர்பாக பேச்சுகள் மிக முக்கிய இடம் பெறுகின்றன. அமெரிக்காவுடன் வர்த்தகம், பாதுகாப்பு உள்ளிட்ட துறைசார்ந்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.


