Advertisements

புதுச்சேரியில் ஆளுநராக பதவி ஏற்றவுடன், நான் சென்ற முதல் இடம் முருகன் கோவில் என்றும், அதை கட்டியவர் ஒரு இஸ்லாமியர் என்றும், வெவ்வேறு தெய்வங்களை வழிபட்டாலும் நாம் அனைவரும் பண்பாட்டு ரீதியில், சகோதரத்துவத்துடன் வாழ்ந்து வருகிறோம் என்று மதுரையில், துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் தெரிவித்தார்.
மதுரையில் ஜூன் 22-ஆம் தேதி முருக பக்தர்கள் மாநாடு நடைபெற உள்ளது. மாநாடு முன்னேற்பாடுகள் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், பல்வேறு இந்து அமைப்பைச் சார்ந்த தலைவர்கள், மாநாட்டுத் திடலுக்கு தினமும் வருகை தந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாசநாதன், முருக பக்தர் மாநாடு நடைபெறும் திடலுக்கு வருகை புரிந்தார். அதன் பின்னர் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கைலாசநாதன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது, புராணங்களை தாண்டி முருகன் தமிழ் கடவுள் என்றும், தமிழர் அதிகம் வழிபடும் கடவுள் முருகன் என்றும், என்னுடைய குல தெய்வமும் முருகன் தான் என்றும் தெரிவித்தார். மேலும். புதுச்சேரியில் ஆளுநராக நாள் பதவி ஏற்றவுடன், நான் சென்ற முதல் இடம் முருகன் கோவில் எனவும், அதை கட்டியவர் ஒரு இஸ்லாமியர் எனவும். வெவ்வேறு தெய்வங்களை வழிபட்டாலும் நாம் அனைவரும் பண்பாட்டு ரீதியில் சகோதரத்துவத்துடன் வாழ்ந்து வருகிறோம் எனவும். புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கைலாசநாதன் தெரிவித்தார்.
Advertisements


