ஈரான்- இஸ்ரேல் இடையேயான போரில், அமெரிக்க இராணுவம் தலையிட்டால், அது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஈரான் இஸ்ரேல் இடையேயான போரில், அமெரிக்கா இஸ்ரேலுடன் இணைவது குறித்து பரிசீலித்து வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த புதன்கிழமை தெரிவித்தார். இந்நிலையில், மாஸ்கோவில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய ரஷிய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மரியா ஜகரோவா, “இந்த கடினமான சூழ்நிலைகளில் அமெரிக்க இராணுவத் தலையீட்டைத் தவிர்க்குமாறு தெரிவித்தார். இஸ்ரேலுக்கு அமெரிக்கா நேரடி இராணுவ உதவி வழங்குவதற்கு அவர் கடுமையான ஆட்சேபனை தெரிவித்தார்.இதற்கிடையே ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் முகமது பின் சயீத் அல் நஹ்யானுடன் ஈரான் பிரச்சனை தொடர்பாக தொலைபேசியில் பேசினார். முன்னதாக மத்தியஸ்தம் செய்ய புதின் முன்வந்த நிலையில், டிரம்ப் அந்த வாய்ப்பை நிராகரித்தார். முதலில் உக்ரைன் உடனான பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வாருங்கள் என அமெரிக்கா அதிபர் டிரம்ப் , ரஷ்ய அதிபர் புதினுடன் கூறியது குறிப்பிடத்தக்கது.


