
பல்லாயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்துள்ள அமைச்சர் கே.என்.நேரு சிறைக்கு செல்வது உறுதி என்று திருச்சி மேற்கு தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் ராஜசேகரன் தெரிவித்தார்.
அமமுக சார்பில் திருச்சி மேற்கு தொகுதியில் போட்டியிடும் ராஜசேகரனும் அதிமுக சார்பில் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடும் ராஜசேகரனும் கன்ட்டோண்மென்ட் அருகே உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அதன்பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அமமுக வேட்பாளர் ராஜசேகரன், திமுகவுக்கு இந்த தேர்தல் முடிவுரை எழுதும் என்று தெரிவித்தார்.
அமலாக்கத்துறை விசாரணையில் உள்ள அமைச்சர் நேரு விரைவில் திகார் சிறைக்குச் செல்வது உறுதி என்று குறிப்பிட்ட அவர், திமுகவில் மன்னர் ஆட்சி நடைபெறுவதாக குற்றஞ்சாட்டினார்..



