அதிகளவில் எரிபொருளை இறக்குமதி செய்ய முடிவு” -அதிபர் புதின் அதிரடி!

தற்காலிக எரிபொருள் தட்டுப்பாட்டைப் போக்க ரஷியா அதிகளவில் எரிபொருளை இறக்குமதி செய்யும் என ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் – ரஷியா போர் 4 ஆண்டுகளைக் கடந்து நீடித்து வரும் நிலையில் அண்மையில் ரஷிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களை வெற்றிகரமாகத் தாக்கியதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் தெரிவித்திருந்தார். ரஷ்யாவின் தகவலின்படி தெற்கு ரஷியாவின் கிராஸ்னோடர் பகுதியில் உள்ள மிகப்பெரிய சுத்திகரிப்பு நிலையத்தின் மீது உக்ரைனின் டிரோன் பாகங்கள் விழுந்ததில் பயங்கரத் தீ விபத்து ஏற்பட்டது.

இதன் காரணமாகக் கருங்கடல் துறைமுகங்கள் வழியிலான ரஷியாவின் எரிபொருள் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது. இத்தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார். இதுதொடர்பாகத் தனியார் தொலைக்காட்சியில் அதிபர் புதின் பேட்டியளித்தபோது, தற்காலிக எரிபொருள் தட்டுப்பாட்டைப் போக்க ரஷியா அதிகளவில் எரிபொருளை இறக்குமதி செய்யும் என்று தெரிவித்தார்.

வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்புகளின் உற்பத்தியை உடனடியாகப் பலமடங்கு அதிகரிக்கப் போவதாகக் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *