Mumbai:சுற்றுலா வந்த இடத்தில் சோகம்.. கார் கவிழ்ந்து 5 பேர் பலி..!

Advertisements

கார் கவிழ்ந்த விபத்தில் தெலுங்கானாவை சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர்.

மும்பை:தெலுங்கானாவை சேர்ந்த 20 வயதுக்கு மேற்பட்ட 6 பேர் காரில் சுற்றுலாவுக்காக மராட்டிய மாநிலம் மும்பைக்கு வந்திருந்தனர். சுற்றுலாவை முடித்துக் கொண்டு நேற்று இரவு அவர்கள் தெலங்கானாவிற்கு மீண்டும் செல்வதற்காகக் காரில் புறப்பட்டனர். அந்தக் கார் புனே-சோலாப்பூர் நெடுஞ்சாலையுள்ள தலாஜ் கிராமம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது காரை ஓட்டியவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் கால்வாய் பள்ளத்தில் கவிழ்ந்தது.

இதையடுத்து அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் உடனடியாகக் காரில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். காரில் இருந்தவர்களை மீட்டப் போது 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரியவந்தது. மேலும் படுகாயமடைந்த ஒருவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து இந்தச் சம்பவம்பற்றிப் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், “மும்பையில் சுற்றுலா முடிந்து 6 பேரும் காரில் சொந்த ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். கனமழைக்கு இடையே வழுக்கும் சாலை காரணமாகக் காரை ஓட்டியவர் கட்டுப்பாட்டை இழந்ததால் வேகமாக வந்த கார் கால்வாய் பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது. காரில் இருந்த ஆறுபேரில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மற்றொருவர் காயமடைந்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார். மேலும் இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது” என்றார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *