Nadhiya:உங்களுக்கு வயசே ஆகாதா? 57 வயதிலும் யங் லுக்கில் ஜொலிக்கும் நடிகை நதியா!

Advertisements

நடிகை நதியா, தன்னுடைய 57 வயதிலும் இளம் ஹீரோயினை போல் செம்ம யங்காக இருக்கும் புகைப்படத்தை வெளியிட அவை ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகிறது.

80-பது மற்றும் 90-களில் தமிழ் சினிமாவை கலக்கிய முக்கிய நடிகைகளில் ஒருவர் நதியா. மலையாள திரையுலகை சேர்ந்த இவர் பின்னர் தமிழ் படங்களில் நடிக்கும் வாய்ப்பைப் பெற்றார்.

1985 ஆம் ஆண்டு வெளியான பூவே பூச்சூடவா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார் நதியா. முதல் படத்திலேயே தன்னுடைய அழகால் ரசிகர்களைக் கவர்ந்த நதியா பின்னர் தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களுக்கு ஜோடி போடத் துவங்கினார்.

அந்த வகையில், ரஜினிகாந்த், விஜயகாந்த், பிரபு, சத்யராஜ் உள்ளிட்ட பல நடிகர்களுடன் நடித்தார். இவரின் நடிப்பு மட்டுமின்றி, டிரஸ், ஹேர் ஸ்டைல், கம்மல், போட்டுப் போன்ற ஒவ்வொன்றுமே அப்போதைய இளம் ரசிகைகள் மத்தியில் கவனம் ஈர்த்தது.

முன்னணி நடிகையாக இருக்கும் பொது கடந்த 1988ஆம் ஆண்டு சிரீஸ் காட்போல் என்பவரைக் காதலித்து திருமணம் செய்து அமெரிக்காவில் செட்டில் ஆனார். தற்போது நதியாவுக்கு அவரைச் சனம், ஜனா என இரண்டு மகள்கள் உள்ளனர்.

தன்னுடைய மகன்கள் வளர்ந்த பின்னர், மீண்டும் சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடிய நதியா 2004 ஆம் ஆண்டு வெளியான எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி என்ற படத்தில் ஜெயம் ரவிக்கு அம்மாவாக நடித்தார்.

தொடர்ந்து தமிழ் சினிமாவில் அம்மா, அண்ணி, போன்ற குணச்சித்திர வேடத்தில் நடித்து வந்தாலும்… பார்ப்பதற்கு செம்ம யங் லுக்கில் ஹீரோயின் போல் தான் உள்ளார். மேலும் இவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் சில, சமூக வலைதளத்தில் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *