Srivilliputhur:மினி பஸ் கவிழ்ந்து விபத்து- 4 பேர் உயிரிழப்பு!

ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே மினி பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பயணிகள் 4 பேர் உயிரிழந்தனர்.

விருதுநகர்:விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா மம்சாபுரத்திலிருந்து இன்று காலை 8 மணியளவில், மினி பஸ் ஒன்று ஸ்ரீவில்லிபுத்தூர் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. இந்தப் பஸ்சில் பள்ளி, கல்லுாரி செல்வோர், பணிக்குச் செல்வோர் எனச் சுமார் 30 பேர் சென்றனர். பஸ் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் இடது புறம் உள்ள பள்ளத்தில் உருண்டது.

இதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 15 பேர் படுகாயம் அடைந்து உள்ளனர். காயமடைந்தவர்கள் தீயணைப்புத் துறையினர் மீட்டனர். சம்பவ இடத்தில் போலீசார், வருவாய்த் துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். விபத்தைத் தொடர்ந்து, ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து மம்சாபுரத்திற்கு கூடுதல் பஸ்கள் இயக்கவும், ரோட்டை அகலப்படுத்த கோரி மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *